Home
Mobile

அடுத்த விவோ 5ஜி போன் ரெடி.. 50எம்பி கேமரா.. IP69 ரேட்டிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்70 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த விவோ போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ எஸ்70 அம்சங்கள் (Vivo S70 Specifications): ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப்செட் உடன் புதிய விவோ எஸ்70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

அடுத்த விவோ 5ஜி போன் ரெடி.. 50MP கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

6.59-இன்ச் 1.5கே எல்டிபிஎஸ் ஒஎல்இடி (1.5K LTPS OLED) டிஸ்பிளே வசதியுடன் விவோ எஸ்70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு 17 (Android 17) இயங்குதள வசதியுடன் விவோ எஸ்70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

50எம்பி பிமைரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் விவோ எஸ்70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP68 மற்றும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)உடன் விவோ எஸ்70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் உள்ளது.

7000எம்ஏஎச் அல்லது 8000எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ எஸ்70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் புதிய விவோ எஸ்70 ஸ்மார்ட்போனில் உள்ளன. 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய மோட்டோரோலா போனில் உள்ளன. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.

அனைத்து சிறப்பான அம்சங்களுடன் விவோ எஸ்70 சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய விவோ போன்.

Best Mobiles in India

English summary
Vivo S70 full specifications and Price leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X