விவோ எஸ்7 5 ஜி ஆகஸ்ட் 3 இந்தியாவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் மற்றும் விலை!

|

விவோ எஸ் 7 5 ஜி ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன்

விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன்

விவோ எஸ் 7 ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய சாதனம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எஸ் 6 5ஜி-ன் வாரிசாக இருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த சில தினங்களாக இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் பரவி வருகின்றன. இதில் கேமரா அம்சங்கள் மற்றும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை வெளிப்படுத்தும் வகையில் டீசரை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டீசரில் வெளியாகியுள்ள அம்சங்கள்

டீசரில் வெளியாகியுள்ள அம்சங்கள்

விவோ எஸ் 7 5ஜி டீசரில் வெளியாகியுள்ள அம்சங்களை வெய்போ வெளியிட்டுள்ளது. இதில் விவோ எஸ் 7 ஸ்மார்ட்போனில் இரட்டை செல்பி கேமரா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோஃபோகஸ் சென்சாருடன் 44 எம்பி செல்பி கேமரா இருக்கும் என டீசர் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சாதனத்தின் பின்புறத்தில் செவ்வக வடிவ கேமரா அமைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

64 எம்பி முதன்மை சென்சார் கேமரா

64 எம்பி முதன்மை சென்சார் கேமரா

விவோ எஸ்7 5 ஜி பின்புறத்தில் 64 எம்பி முதன்மை சென்சார் கேமராவும் சாம்சங் ஜி டபுள்யூ 1 சென்சார், 8 எம்பி சூப்பர் வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 13 எம்பி சாம்சங் போர்ட்ரெய்ட் சென்சார் அம்சம் இருக்கும் என முந்தய கசிவுத் தகவல் தெரிவித்தன.

விண்வெளி பட்டாம்பூச்சி: விஞ்ஞானிகள் பதிவு செய்த அருமையான காட்சி.!விண்வெளி பட்டாம்பூச்சி: விஞ்ஞானிகள் பதிவு செய்த அருமையான காட்சி.!

முன்புறக் காட்சியில் கைரேகை ஸ்கேனர்

முன்புறக் காட்சியில் கைரேகை ஸ்கேனர்

அதேபோல் டீசரில் காணப்பட்டுள்ள படத்தின்படி பின்புறத்தில் கைரேகை சென்சார் ஏதுமில்லை. பாதுகாப்பு அம்சங்களாக ஸ்மார்ட்போன் முன்புறக் காட்சியில் கைரேகை ஸ்கேனர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கிரீன் அளவு குறித்து இதுவரை எந்த தகவலும் இதுவரை இல்லை. இருப்பினும் சானத்தில் முழு ஹெச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் அமோலெட் பேனைக் கொண்டிருக்கும்.

ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன்

ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன்

விவோ எஸ் 7 5ஜி ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி செயலி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சாதனம் 5 ஜி ஆதரவுடன் இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சாதனத்தின் ரேம் பவர் மற்றும் சேமிப்பக உள்ளமைவு குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த சாதனம் எத்தனை வேரியண்ட்டில் கிடைக்கும் என தெரியவில்லை.

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்

விவோ எஸ் 7 5ஜி ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான ஃபன் டச் யுஐ மூலம் இயங்கும் என வதந்திகள் பரவியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை என மூன்று வண்ணங்களில் கிடைக்கும் என தெரிகிறது. பேட்டரி குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. கசிவுத் தகவலின்படி இந்த சாதனம் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்டிருக்கக் கூடும் என தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Vivo S7 5 G Going to Launch in India on August 3 Expected Price and Features

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X