Home
Mobile

7.92mm ஸ்லிம் டிசைனில் 7200mAh ப்ளூ ஓஷன் பேட்டரி, IP69 ரேட்டிங்.. புது VIVO 5ஜி போன் அறிமுகம்!

விவோ (Vivo) நிறுவனம், சீன சந்தையில் விவோ எஸ்60 மற்றும் விவோ எஸ்60இ (VIVO S60e) என்கிற 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இரண்டுமே பிரீமியம் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். சீனாவில் எஸ் சீரீஸின் கீழ் வரும் மாடல்கள் இந்திய சந்தையில் வி சீரீஸின் கீழ் வர வாய்ப்புள்ளதால், இவ்விரு மாடல்கள் மீதும் நாம் ஒரு கண் வைப்பதில் எந்த தவறும் இல்லை.

விவோ எஸ்60 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது புகைப்படம் எடுக்கும் திறன் மற்றும் பேட்டரி லைஃப் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது. அதே சமயம் அதன் கச்சிதமான டிசனையும் பெற்றுள்ளது. விவோ எஸ்60 சீரிஸின் ஒரு முக்கிய சிறப்பம்சம் அதன் பிரம்மாண்டமான 7,200mAh பேட்டரி ஆகும்.

7.92mm ஸ்லிம் டிசைனில் 7200mAh ப்ளூ ஓஷன் பேட்டரி, IP69 ரேட்டிங்!

இந்த பேட்டரி 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெரிய பேட்டரி இருந்தபோதிலும், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 7.92மிமீ ஸ்லிம் டிசைனையும், சுமார் 199g எடையையும் கொண்டுள்ளன, இதனால் இவற்றை கையாள்வது எளிதாக இருக்கும். வேறு என்னென்ன அம்சங்கள்? என்ன விலை? இதோ விவரங்கள்:

விவோ எஸ்60 மற்றும் விவோ எஸ்60இ ஆகிய இரண்டு மாடல்களுமே 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.59-இன்ச் பிளாட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிரீமியம் மெட்டல் ஃபிரேம் மற்றும் சீம்லெஸ் கிளாஸ் பேக் பேனலை கொண்டுள்ளன.

வேறுபாட்டை பொறுத்தவரை, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் செயலாக்க திறனில் வேறுபடுகின்றன. விவோ எஸ்60 மாடல் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அதே சமயம், விவோ எஸ்60இ மாடல் ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 7500 பிராசஸரை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 50 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. விவோ எஸ்60 ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

மறுகையில் உள்ள விவோ எஸ்60இ ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸை தக்க வைத்து கொண்டுள்ளது, ஆனால் பிரத்யேக டெலிஃபோட்டோ சென்சார் இதில் இல்லை. இரண்டு ஸ்மார்ட்போன்களும் விவோவின் 7200mAh ப்ளூ ஓஷன் பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றன மற்றும் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன.

விவோ எஸ்60 சீரிஸில் 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் தூசி, நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங்களையும் கொண்டுள்ளன. கூடுதலாக, லாக் ஸ்கிரீன் மற்றும் ஹோம் ஸ்கிரீனுக்கு இன்டர்ஆக்டிவ் கதாபாத்திர எலிமெண்ட்களை கொண்டுவரும் புதிய "கு மேய் காம்பொனென்ட்" அம்சத்தையும் விவோ அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில், நடிகை தியான் சிவேயால் ஈர்க்கப்பட்ட ஒரு பிரத்யேக விஷுவல் தீமையும் இந்நிறுவனம் வழங்குகிறது.

விவோ எஸ்60 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்: விவோ எஸ்60இ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வேரியன்ட் ஆனது, இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.40,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள விவோ எஸ்60 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது சுமார் ரூ.50,525 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வி சீரீஸ் மாடல்களாக அறிமுகம் செய்யப்படலாம். ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூரவ தகவல் இல்லை; தகவல் கிடைத்தால் உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Vivo S60e With 7200mAh Blue Ocean battery IP69 Along With Vivo S20 Launched Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X