புது VIVO போன்.. சுண்டி இழுக்கும் ஹாரிசாண்டல் கேமரா பார் டிசைனில் 7000mAh பேட்டரி, IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
சீனாவில் உள்ள பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டுகள், சக்திவாய்ந்த மற்றும் கேமராவை மையமாக கொண்ட புதிய மிட்-ரேன்ஜ் விலை போன்களை இந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. இவற்றில் ஹானர் 600 சீரிஸ், ஒப்போ ரெனோ 16 சீரிஸ் மற்றும் விவோ எஸ்60 சீரீஸ் ஆகியவைகள் அடங்கும்.
இவைகளில் விவோ எஸ்60 சீரிஸ் மீதான எதிர்பார்ப்புகளே அதிகம். ஏனென்றால் சீனாவில் விவோ எஸ் சீரீஸின் கீழ் அறிமுகமாகும் மாடல்கள் இந்தியாவில் விவோ வி சீரீஸின் கீழ் மற்றும் எக்ஸ் சீரீஸின் கீழ்.. ரீபிராண்டட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அதையே நாம் விவோ எஸ்60 சீரீஸ் (VIVO S60 Series) ஸ்மார்ட்போன்களிலும் எதிர்பார்க்கலாம்.

விவோ எஸ்60 சீரீஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்துள்ள விவரங்களின்படி.. வரவிருக்கும் விவோ எஸ்60 சீரிஸில் 6.59-இன்ச் 1.5கே டிஸ்பிளே இடம்பெறலாம். இது ஸ்டாண்டர்ட் விவோ எஸ்60 ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன் சைஸ் ஆக இருக்கலாம்.
விவோ எஸ்60 ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் ஒரு பெரிய கிடைமட்ட கேமரா அமைப்பு இடம்பெறும் என்றும், இது ஸ்னாப்டிராகன் 8எஸ்-சீரிஸ் சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்றும் மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறுகிறார் இந்த ஸ்மார்ட்போனில் "7" என்கிற எண்ணில் தொடங்கும் பேட்டரி திறன் இருக்கும் என்றும், இது 7,000mAh வரம்பில் ஒரு பேட்டரியை குறிக்கும் என்றும், அத்துடன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது ஹாரிசாண்டல் கேமரா பார் டிசைனில் சோனி IMX8-சீரிஸ் மிட் ரேன்ஜ் அளவிலான பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் உடன் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களில் மெட்டலால் ஆன மிடில் ஃபிரேம், டிஸ்பிளேவிலேயே உள்ள அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், IP68/IP69 ரேட்டிங் பெற்ற தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறன், மற்றும் மேக்னட்டிக் கேஸ்கள் வழியாக மேக்னட்டிக் ஆக்சஸெரீஸ்களுக்கான ஆதரவு ஆகியவைகளும் இடம்பெறலாம்.
விவோ எஸ்60 உடன், விவோ எஸ்60 ப்ரோ மினி ஸ்மார்ட்போனும் வெளியாகலாம். நினைவூட்டும் வண்ணம் சீனாவில் விவோ எஸ்50 ப்ரோ மினி ஆக அறிமுகம் செய்யப்பட்ட மாடல் சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளில் விவோ எக்ஸ்300 எப்இ என ரீபிராண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, எஸ்60 மாடல் வி சீரிஸின் கீழ் எஸ்60 ப்ரோ மினி மாடல், அது 2027-ஆம் ஆண்டின் முதல் பாதியில் விவோ எக்ஸ்500 எப்இ ஆகவும் இங்கே அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.
சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்களில் விவோ வி70 எப்இ 5ஜி (Vivo V70 FE 5G) மாடல் கவனிக்கத்தக்க மாடல் ஆக உள்ளது. இது ஏப்ரல் 2026 இல் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.37,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக உள்ள 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட்கள் முறையே ரூ.40,999 மற்றும் ரூ.44,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
விவோ வி70 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் 1.5K (2800×1260 பிக்சல்ஸ்) OLED டிஸ்பிளே
- 4என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7360-டர்போ சிப்செட்
- எப்/1.88 அபெர்ச்சர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) வசதியுடன் கூடிய 200 மெகாபிக்சல் 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார்
- எப்/2.2 அபெர்ச்சர், 120-டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் ஆரா லைட் ஆதரவுடன் கூடிய 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- எப்/2.2 அபெர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங்
- நீருக்கடியில் புகைப்படம் எடுப்பதற்கான ஆதரவு
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 7,000mAh பேட்டரி.


Click it and Unblock the Notifications