Home
Mobile

விவோ அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 7200எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

விவோ நிறுவனம் விவோ எஸ்60 Vitality Edition மாடலை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து
நாடுகளிலும் அறிமுகமாகும். இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ எஸ்60 Vitality Edition அம்சங்கள் (Vivo S60 Vitality Edition specifications): 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் விவோ எஸ்60 Vitality Edition ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில 1,260 x 2,750 பிக்சல்ஸ், 1.07 பில்லியன் கலர்ஸ், எச்டிஆர் சப்போர்ட், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 300Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

விவோ அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7500 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7500 4nm) சிப்செட் உடன் இந்த விவோ எஸ்60 Vitality Edition ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமிங் பயனர்களை கவரும் வகையில் Mali-G625 GPU கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் விவோ எஸ்60 Vitality Edition ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் விவோ எஸ்60 Vitality Edition ஸ்மார்ட்போனில் உள்ளது. 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ எஸ்60 Vitality Edition ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனில் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

7200எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ எஸ்60 Vitality Edition ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

விவோ அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS, கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய விவோ போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 207 கிராம் ஆகும். ஏர்லி சம்மர் கிரீன், மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம் மற்றும் சீ ஆஃப் ஸ்டார்ஸ் கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.

விவோ எஸ்60 Vitality Edition விலை

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்60 Vitality Edition மாடலின் விலை CNY 2,899 (இந்திய மதிப்பில் ரூ.41,000)
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்60 Vitality Edition மாடலின் விலை CNY 3,199 (இந்திய மதிப்பில் ரூ.45,000)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்60 Vitality Edition மாடலின் விலை CNY 4,499 (இந்திய மதிப்பில் ரூ.49,000)

Best Mobiles in India

English summary
Vivo S60 Vitality Edition with 7200mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X