விவோ எஸ் 6 ப்ரோ விரைவில் இந்தியாவில்: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்!
இந்தியாவில் விரைவில் விவோ எஸ் 6 ப்ரோ வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்து சில தகவல்கள் லீக்காகியுள்ளது.

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ தனது எஸ் தொடரின் முதல் ஸ்மார்ட்போனை விவோ எஸ் 6 5ஜி யை ஏப்ரல் மாதம் அறிமுகப்படத்தியது. இந்த ஸமார்ட்போனின் ப்ரோ மாடல் அறிமுகப்படுத்துவதற்கு நிறுவனம் தயாராகி உள்ளது. விவோ எஸ் 6 ப்ரோ குறித்து லீக்கான தகவல்படி இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

விவோ எஸ் 6 ப்ரோ 5 ஜி
விவோ எஸ் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த வெளியான தகவலின்படி அதே நேரத்தில் ஒப்போ ரெனோ 4 மற்றும் ஹூவாய் நோவா 7 போன்ற ஸ்மார்ட்போன்கள் போட்டியாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை சேமிப்பு வசதி
இந்த சாதனமானது இரண்டு வேரியண்டுகளில் விற்பனைக்கு வர வாய்ப்பிருப்பதாக லீக்கான தகவல்கள் தெரிவிக்கிறது. இது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு வசதிகளில் கிடைக்கும். கசிவு தகவல்களின்படி, இதன் விலை 2,998 யுவான் (சுமார் ரூ. 32,060) மற்றும் 3,298 யுவான் (சுமார் 35,339 ரூபாய்) ஆக இருக்க வாய்ப்புள்ளது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
விவோ எஸ் 6 ப்ரோ 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் ஓஎல்இடி பேனலைக் கொண்டிருக்கும். டிஸ்ப்ளே அளவு மற்றும் வடிவமைப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. விவோ எஸ் 6 5 ஜி, பஞ்ச்-ஹோல் திரையைக் கொண்டுள்ளது. எனவே, எஸ் 6 ப்ரோ இரட்டை பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே கொண்டதாக இருக்கும் என்று லீக்கான தகவலில் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 765 ஜி ஆக்டோ கோர் சிப்செட்
விவோ எஸ் 6 ப்ரோ மாடலிலும் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இடம்பெறும். விவோ எஸ் 6 ப்ரோ 5 ஜி ஸ்னாப்டிராகன் 765 ஜி ஆக்டோ கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 2.1 சேமிப்பகத்தை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 4,200 mAh பேட்டரி மற்றும் 33W பாஸ்ட் சார்ஜ் வசதி இருக்கும் என கசிவு தகவலில் தெரிவிக்கப்படுகிறது.

64 எம்பி பிரதான கேமரா
பின் பேனலில் குவாட் கேமரா அமைப்பு இருக்கும். இந்த கேமரா அமைப்பில் உள்ள கேமராக்கள் 64 எம்பி சாம்சங் ஜிடி 1 பிரதான சென்சார், 8 எம்பி சூப்பர் வைட் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் இருக்கும் என கூறப்படுகிறது.

32 எம்பி செல்பி கேமரா
இந்த சாதனம் 32 எம்பி சாம்சங் ஜிடி 1 மெயின் சென்சார் மற்றும் 8 எம்பி லென்ஸுடன் இரட்டை செல்பி கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications