விவோ அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 6500எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்50டி Vitality எடிஷன் (Vivo S50t Vitality Edition) மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விவோ எஸ்50டி Vitality எடிஷன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ எஸ்50டி Vitality எடிஷன் அம்சங்கள் (Vivo S50t Vitality Edition Specifications): 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த விவோ எஸ்50டி Vitality எடிஷன் மாடல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,260 x 2,750 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), எச்டிஆர், பி3 கலர் காமட் சப்போர்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தரமான 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் (4nm Snapdragon 8s Gen 3 chipset) உடன் விவோ எஸ்50டி Vitality எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது விவோ எஸ்50டி Vitality எடிஷன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த புதிய விவோ போனில் உள்ளன.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் விவோ எஸ்50டி Vitality எடிஷன் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.
OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் விவோ எஸ்50டி Vitality எடிஷன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

6500எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ எஸ்50டி Vitality எடிஷன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி எல்டிஇ, என்எப்சி, வைஃபை 6, புளூடூத் 5.4. யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 196 கிராம் ஆகும். ஸ்பேஸ் பிளாக், இன்ஸ்பிரேஷன் பர்பிள், கன்ஃபெஷன் ஒயிட் மற்றும் செரீன் ப்ளூ ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும். குறிப்பாக விவோ எஸ்50டி Vitality எடிஷன் மாடலின் ஆரம்ப விலை CNY 3,299 (இந்திய மதிப்பில் ரூ.46,700) ஆகும்.


Click it and Unblock the Notifications