Home
Mobile

சத்தமில்லாமல் அறிமுகமானது புதிய Vivo போன்.. 50எம்பி கேமரா.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் புதிய விவோ எஸ்50டி 5ஜி ஸ்மாரட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ எஸ்50டி 5ஜி அம்சங்கள் (Vivo S50t 5G specifications): 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் விவோ எஸ்50டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்த போனில் டிஸ்பிளேவில் எச்டிஆர் ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), பி3 கலர் காமட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

 சத்தமில்லாமல் அறிமுகமானது புதிய Vivo போன்.. எந்த மாடல்?

OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ எஸ்50டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ எஸ்50டி 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

தரமான ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப் (Snapdragon 8s Gen 3 chip) சிப்செட் வசதியுடன் விவோ எஸ்50டி 5ஜி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் விவோ எஸ்50டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

6500எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ எஸ்50டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த போனில் உள்ளன. செரினிட்டி ப்ளூ, இன்ஸ்பிரேஷன் பர்ப்பிள், ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

ஐஆர் பிளாஸ்டர், வைஃபை 6, என்எஃப்சி, புளூடூத் 5.4 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ எஸ்50டி 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த புதிய விவோ போனின் ஆரம்ப விலை 3,299 yuan (இந்திய மதிப்பில் ரூ.45,868) ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

Best Mobiles in India

English summary
Vivo S50t 5G with 6500mAh battery launched in China: Check Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X