Home
Mobile

அளவில் குட்டி, அம்சங்களில் கெட்டி.. புது VIVO மினி போன்.. 16GB ரேம், 6500mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5!

விவோ (Vivo) நிறுவனம் விவோ எக்ஸ்300 சீரீஸின் 2 பிளாக்ஷிப் ஸ்மார்போன்களை அறிமுகம் செய்த கையோடு.. கூடிய விரைவில் ஒரு புதிய மினி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அது விவோ எஸ்50 ப்ரோ மினி (Vivo S50 Pro Mini) ஸ்மார்ட்போனாகும். சீனாவில் இது "மினி" மாடலாகவும், உலகளவில் விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) ஆகவும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்த மினி ஸ்மார்ட்போன் பவர்புல் ஆன சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் மீண்டும் கிடைத்துள்ளது. முன்னதாக இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் வரும் என்கிற தகவல் கிடைத்து இருந்தது. இப்போது லேட்டஸ்ட் கீக்பெஞ்ச் லிஸ்டிங் மூலம் குறிப்பிட்ட சிப்செட் "மீண்டும்" உறுதி செய்யப்பட்டுள்ளது.

16GB ரேம், 6500mAh பேட்டரி.. புது VIVO மினி போன்!

விவோ எஸ்50 ப்ரோ மினி / விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? இந்த ஸ்மார்ட்போன் 16GB LPDDR5X ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் வரலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.31-இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

கேமரா செட்டப்பில் விசிஎஸ் லைட் சென்சிடிவ் கொண்ட ப்ரைமரி சென்சார், சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50-மெகாபிக்சல் ஆன்டி-டிஸ்டோர்ஷன் செல்ஃபி கேமரா ஆகியவைகள் இடம்பெறலாம். மேலும் ஒரு க்ளீன் ஆன தோற்றத்திற்காக வழக்கமாக இடம்பெறும் கேமரா பம்ப் நீக்கப்படலாம். பேட்டரியை பொறுத்தவரை சாதனத்தை விவோவின் இந்த மினி ஸ்மார்ட்போனில் 90W வயர்டு சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 6,500mAh பேட்டரி பேக் செய்யப்படலாம்.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் 2.0, நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங் மற்றும் மேம்பட்ட ஹாப்டிக் ரெஸ்பான்ஸிற்கான எக்ஸ்-ஆக்சிஸ் நேரியல் மோட்டார் ஆகியவைகளை கொண்டிருக்கலாம். எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை இது ரூ.40,000 க்குள் அல்லது ரூ.40,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவோ எக்ஸ்300 சீரிஸின் விலை விவரங்கள்: விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.75,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.81,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.85,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மறுகையில் உள்ள விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவ்விரு வெறியன்ட்களுக்கும் டெலிகன்வெர்ட்டர் கிட் (Teleconverter Kit ) ஆனது தனியாக வாங்க கிடைக்கும். இதன் விலை ரூ.18,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்துமே (பேங்க் ஆபர்களுடன் - போன்கள்) டிசம்பர் 10 ஆம் தேதி விற்பனைக்கு வரும். முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.

7000+ mAh பேட்டரி உடன் விவோ எக்ஸ்300 அல்ட்ரா: விவோ எக்ஸ்300 சீரிஸின் கீழ் பிளாக்ஷிப் + பிக் பேட்டரி என்கிற காம்பினேஷனில் விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் நம்பகமான லீக்கர் ஆன ஸ்மார்ட் பிகாச்சுவிடம் இருந்து வருகிறது. இது மார்ச் 2026 இல் அறிமுகம் செய்யப்படலாம்

விவோ ஏற்கனவே அதன் எக்ஸ் சீரீஸின் பேட்டரி திறனை சீராக அதிகரித்து வருகிறது. விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 6000mAh சிலிக்கான்-கார்பன் செல் பேக் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் விவோ எக்ஸ்300 சீரீஸ் வந்தது. அதில் ஸ்டாண்டர்ட் மாடல் 6040mAh பேட்டரியையும், ப்ரோ மாடல் 6510mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. ஆக விவோ எக்ஸ்300 அல்ட்ரா மாடலில் தோராயமாக 7000mAh அல்லது அதற்கும் மேலான பேட்டரி இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo S50 Pro Mini With Snapdragon 8 Gen 5 Launching Soon Vivo X300 FE in global markets Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X