Home
Mobile

அடிச்சான் பாரு VIVO.. புதிய Mini போன்.. 6500mAh பேட்டரி, ஃபுல்-லெவல் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், 90W சார்ஜிங்!

விவோ (Vivo) நிறுவனமானது அடுத்த மாதம், அதாவது டிசம்பர் 2025 இல் அதன் விவோ எஸ்50 (Vivo S50) மற்றும் விவோ எஸ்50 ப்ரோ மினி (Vivo S50 Pro Mini) ஆகிய 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவில் எஸ்50 சீரீஸின் கீழ் அறிமுகமாகும் மாடல்கள் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் வி70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களாக அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் சீனாவில் விவோ எஸ்30 ஆக அறிமுகமான ஸ்மார்ட்போன் உலகளாவிய சந்தைகளில் விவோ வி60 (Vivo V60) ஆக வந்தது. இதையே நாம் விவோ எஸ்50 சீரீஸிலும் எதிர்பார்க்கலாம்.

அடிச்சான் பாரு VIVO.. புதிய Mini போன்.. 6500mAh பேட்டரி!

விவோ எஸ்50 சீரீஸ் அறிமுகத்திற்கு முன்னதாக, டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (DCS) வழியாக இந்த சீரிஸின் "காம்பாக்ட்" மாடல் ஆன விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் லீக் செய்யப்பட்டுள்ளது. அதன்படி எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் கொண்டு இயங்கும்

குறிப்பிடத்தக்க வகையில் குவால்காம் (Qualcomm) நிறுவனம் இன்னும் இந்த சிப்செட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் இது விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T - இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர்) மாடலின் வழியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒன்பிளஸ்-ஐ தொடர்ந்து விவோவும் இந்த சிப்செட்டை பேக் செய்யலாம்.

விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிஸ்பிளேவை பொறுத்தவரை விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் பிளாட் டிஸ்பிளேவை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இது (டிசைன் அடிப்படையில்) ஆப்பிளின் ஐபோன் ஏர் மாடலுக்கு போட்டியாக களமிறங்குவது போல் தெரிகிறது

"மினி" என்கிற மாடல் பெயரை கொண்டிருந்தாலும் இது ஒரு பெரிய 6,500mAh பேட்டரியை பேக் செய்யுமென்று கூறப்படுகிறது. இது பெரும்பாலான முழு அளவிலான ஃபிளாக்ஷிப் மாடல்களில் உள்ள பேட்டரியை விட சற்று அதிகமாகும். கேமராக்களை பொறுத்தவரை மினி மாடலில் 50எம்பி சோனி IMX9-சீரிஸ் ப்ரைமரி கேமரா மற்றும் 50MP IMX882 பெரிஸ்கோப் லென்ஸ் ஆகியவைகள் இடம்பெறலாம்

இதுதவிர்த்து அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ரீடர் மற்றும் "ஃபுல்-லெவல்" வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (IP68 மற்றும் IP69 ரேட்டிங்ஸ்) ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கலாம். விவோ எஸ்50 சீரிஸின் 2 மாடல்களுக்கும் உள்ள ஒற்றுமையை பொறுத்தவரை இரண்டுமே மெட்டல் ஃபிரேம் மற்றும் ஒரு பெரிஸ்கோப் கேமராவை கொண்டிருக்கலாம். கூடவே LPDDR5X ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜையும் பெறலாம். கடைசியாக இரண்டு ஸ்மார்ட்போன்களும் 90W பாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கலாம்.

முன்னதாக அறிமுகமான விவோ வி60 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்தியாவில் விவோ வி60 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.36,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆஸ்பிசியஸ் கோல்ட், மிஸ்ட் கிரே மற்றும் மூன்லைட் ப்ளூ ஆகிய கலர் ஆப்ஷன்களில் வெளியானது

விவோ வி60 ஸ்மார்போனின் முக்கிய அம்சங்கள் (Vivo V60 Specifications):
- 6.77-இன்ச் (1080x2392) டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங்
- 6500mAh பேட்டரி

விவோ வி60 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Vivo V60 Lite 4G Specifications):
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 6.77-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ சிப்செட்
- இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 ப்ரைமரி கேமரா
- 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 32எம்பி செல்பீ கேமரா
- 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6500mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo S50 Pro Mini With Snapdragon 8 Gen 5 Chipset 6500mAh Battery Launching December 2025 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X