அடுத்த Vivo மாடல்.. 6040mAh-க்கு மேல பேட்டரி.. ஆனால், 6.3 இன்ச் மினி டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனத்தின் அடுத்த மினி மாடலாக விவோ எஸ்50 ப்ரோ மினி (Vivo S50 Pro Mini) வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சீன மார்கெட்டில் ஒரு வெர்ஷனாகவும், குளோபல் மார்கெட்டில் மற்றொரு வெர்ஷனாகவும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, சிப்செட் விவரங்கள் கசிந்துள்ளன. இந்தியாவில் எந்த வெர்ஷன் எதிர்பார்க்கலாம்? எப்போது வெளியாகும்? பீச்சர்கள் எப்படி இருக்கும்? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் வருகிற நவம்பர் மாதத்தில் விவோ எஸ்50 மற்றும் விவோ எஸ்50 ப்ரோ மினி மாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ப்ரோ மினி மாடலில் டைமன்சிட்டி 9400 பிளஸ் (Dimensity 9400 Plus) கிடைக்கலாம் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இப்போது டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) மூலம் மற்றொரு சிப்செட் அடிபடுகிறது.

அதாவது, இந்த விவோ எஸ்50 ப்ரோ மினி மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 எஸ்ஓசி (Snapdragon 8 Gen 5 SoC) கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது. டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மூலம் வெளிவரும் பீச்சர்கள் கிட்டத்தட்ட உறுதியாகிவிடுகின்றன. ஆகவே, இந்த சிப்செட்டுடன் விவோ எக்ஸ்50 ப்ரோ மினி மாடலை எதிர்பார்க்கலாம். இதுபோக முக்கிய பீச்சர்களும் கசிந்துள்ளன.
விவோ எஸ்50 ப்ரோ மினி அம்சங்கள் (Vivo S50 Pro Mini Specifications): இதுவொரு மினி மாடலாக இருப்பதால், வெறும் 6.3 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவுடன் கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் வர இருக்கிறது. மேலும், 50 எம்பி மெயின் கேமரா மற்றும் டெலிபோட்டோ கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது.
50 எம்பி செல்பீ கேமரா வர இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) கிடைக்க இருக்கிறது. இந்த விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போனின் பேட்டரி கேபாசிட்டி வெளியாகவில்லை. இருப்பினும், விவோ எக்ஸ்300 மாடலைவிட பெரிய பேட்டரி கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.
விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனில் 6,040mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைத்தது. அதேபோல 40W வயர்லெஸ் சார்ஜிங் கிடைத்தது. ஆகவே, விவோ எக்ஸ்50 ப்ரோ மனி ஸ்மார்ட்போனில் 6,040mAh பேட்டரி கேபாசிட்டிக்கு மேல் எதிர்பார்க்கலாம். ஆனால், 7000mAh பேட்டரிக்கும் கம்மியாகவே இருக்கும். ஏனென்றால், இதுவொரு காம்பாக்ட் டிஸ்பிளே மாடலாகும்.
இந்த விவரங்கள் மட்டுமே கசிந்துள்ளன. அதேபோல சீன மார்கெட்டில் மட்டும் விவோ எஸ்50 ப்ரோ மினி மாடலாக இது வெளியாகும். குளோபல் மார்கெட்டில் வரும்போது விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) மாடலாக களமிறங்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, டிசைன் மற்றும் கலர் வேரியண்ட்கள் விவோ எக்ஸ்300 போலவே எதிர்பார்க்கலாம்.
அதேபோல இந்திய மார்கெட்டில் விவோ எக்ஸ்300 எப்இ மாடலாக இதை எதிர்பார்க்கலாம். முன்னதாக வெளியான விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனில் 6.31 இன்ச் டிஸ்பிளே கிடைத்தது. அதேபோல ஆக்டோ கோர் டைமன்சிட்டி 9500 3என்எம் (Octa Core Dimensity 9500 3nm) சிப்செட் கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.
மேலும், 50 எம்பி டெலிபோட்டோ கிடைத்தது. அதேபோல 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 6 கிடைத்தது. இந்த ஓஎஸ் எப்இ மாடலில் எதிர்பார்க்கலாம். சீனாவில் ரூ.54,800 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்கிறது. இதைவிட மலிவான விலைக்கு விவோ எக்ஸ்300 எப்இ மாடலின் விலை இருக்க அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








