Home
Mobile

டிச.15 அறிமுகம். VIVO புது மினி 5ஜி போன்.. 16GB ரேம், 6500mAh பேட்டரி, 90W சார்ஜிங்.. விலை எவ்ளோ இருக்கும்?

விவோ (Vivo) நிறுவனம் கூடிய விரைவில் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்றும், அதில் ஒன்று விவோவின் மினி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த ஸ்மார்ட்போன்கள் - விவோ எஸ்50 (Vivo S50 ) மற்றும் விவோ எஸ்50 ப்ரோ மினி (Vivo S50 Pro Mini) ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்த டீஸர்கள் இவ்விரு மாடல்களின் புதுப்பிக்கப்பட்ட தோற்றத்தை காட்டுகின்றன, அதே நேரத்தில் ப்ரோ மினி மாடலில் சேர்க்கப்பட்டுள்ள ஹார்ட்வேர் குறித்த பார்வையையும் வழங்குகின்றன. இது தவிர சில முக்கிய உள் அம்சங்களை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

டிச.15 அறிமுகம். VIVO புது மினி 5ஜி போன்.. விலை எவ்ளோ இருக்கும்?

விவோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், இவைகள் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் எஸ்50 சீரீஸின் கீழ் அறிமுகமாகும் இந்த மாடல்கள் இந்தியாவில் விவோ வி70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களாக அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ எஸ்50 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5கே ரெசல்யூஷன் உடனான ஒரு பெரிய 6.59-இன்ச் OLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்
- 16ஜிபி LPDDR5X RAM
- UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 50 மெகாபிக்சல் செல்பீ கெமர்
- 50 மெகாபிக்சல் Sony IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா
- ஒரிஜின் ஓஎஸ் 6
- 90W பாஸ்ட் சார்ஜிங் (பேட்டரி அளவு குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை)
- பிளாக், ஒயிட், ப்ளூ மற்றும் பர்பிள் ஆகிய 4 கலர் ஆப்ஷன்கள்
- விலை ரூ.40,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் இருக்கலாம்

விவோ எஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.31-இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளே
- 16GB வரை LPDDR5X ரேம்
- UFS 4.1 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8ஜென் 5 சிப்செட்
- விசிஸ் லைட் சென்சார் கொண்ட ப்ரைமரி கேமரா
- சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ்
- அல்ட்ரா-வைட் லென்ஸ்

- 50-மெகாபிக்சல் ஆன்டி-டிஸ்டார்ஷன் செல்பீ கேமரா
- 90W வயர்டு சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங்
- 6500mAh பேட்டரி
- அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் 2.0
- IP68 மற்றும் IP69 ரேட்டிங்
- மேம்படுத்தப்பட்ட ஹாப்டிக்குகளுக்கான எக்ஸ்-ஆக்சிஸ் நேரியல் மோட்டார்
- விலை ரூ.40,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் இருக்கலாம்

சமீபத்தில் அறிமுகமாகி டிசம்பர் 10 முதல் விற்பனைக்கு வரும் விவோ எக்ஸ்300 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்: விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.75,999 க்கு வாங்க கிடைக்கும். இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.81,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.85,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மறுகையில் உள்ள விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு வாங்க கிடைக்கும். இவ்விரு வெறியன்ட்களுக்கும் டெலிகன்வெர்ட்டர் கிட் (Teleconverter Kit ) ஆனது தனியாக வாங்க கிடைக்கும். இதன் விலை ரூ.18,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இவ்விரு மாடல்களுமே பேங்க் ஆபர்களுடன் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் இந்தியாவில் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo S50 Pro Mini Tipped to Launch in December 15 Rebranded under Vivo V70 Series in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X