டீசரே பட்டய கிளப்புதே! ஸ்னாப்டிராகன் சிப்செட்.. OLED டிஸ்பிளே.. வருகிறது புது Vivo போன்.. எந்த மாடல்?
விவோ எஸ்50 ப்ரோ மினி (Vivo S50 Pro Mini) ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது விவோ நிறுவனம். அதுவும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் உடன் விவோ எஸ்50 ப்ரோ மினி அறிமுகம் செய்யப்படும் என்று டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் வரும் வாரங்களில் சீனாவில் அறிமுகமாகும்.
அதன்பின்பு தான் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும். மேலும் ஆன்லைன் ஏற்கனவே கசிந்த இந்த விவோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ எஸ்50 ப்ரோ மினி அம்சங்கள் (Vivo S50 Pro Mini Specifications): 6.31-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் புதிய விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chip) உடன் இந்த புதிய விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் வெளியாகும். இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் விவோ எஸ்50 ப்ரோ மினி போன் வெளிவரும். மேலும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் . எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களும் இந்த விவோ போனில் உள்ளது.
3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor) வசதி இந்த விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ எஸ்50 ப்ரோ மினி போன் வெளிவரும்.

6040mAh பேட்டரி வசதியுடன் விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவரும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








