அடுத்த மாதம் அறிமுகமாகும் புது Vivo 5ஜி போன்.. 6040mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் அடுத்து விவோ எஸ்50 ப்ரோ மினி (Vivo S50 Pro Mini) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் டிசம்பர் மாதம் சீனாவில் இந்த புதிய விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதனுடன் விவோ எஸ்50 மாடலும் வெளியாகும் எனத் தகவல்கள் கசிந்துள்ளது.
குறிப்பாக விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

விவோ எஸ்50 ப்ரோ மினி அம்சங்கள் (Vivo S50 Pro Mini Specifications): 6.31-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் புதிய விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chip) உடன் இந்த புதிய விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் வெளியாகும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் விவோ எஸ்50 ப்ரோ மினி போன் வெளிவரும். மேலும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களும் இந்த விவோ போனில் உள்ளது.
6040mAh பேட்டரி வசதியுடன் விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதி இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ எஸ்50 ப்ரோ மினி போன் வெளிவரும்.
5ஜி, 4ஜி வோல்ட், வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய விவோ போனில் உள்ளன. மேலும் இந்த விவோ எஸ்50 ப்ரோ மினி போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








