Home
Mobile

டிசைன் அள்ளுதே.. சோனி கேமரா.. ஆண்ட்ராய்டு 16 OS.. 16ஜிபி ரேம்.. வருகிறது புது Vivo போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் வரும் டிசம்பர் மாதம் துவக்கத்தில் விவோ எஸ்50 (Vivo S50) மற்றும் விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன்கள் சீனாவில் வெளியான சில வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகமாகும். இந்நிலையில் விவோ எஸ்50 படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஐபோன் போன்ற முக்கோண கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ எஸ்50 ஸ்மார்ட்போன். அதாவது இந்த போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதியும் உள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

டிசைன் அள்ளுதே.. வருகிறது புது விவோ போன்.. எந்த மாடல்?

விவோ எஸ்50 அம்சங்கள் (Vivo S50 Specifications): ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் ( Snapdragon 8s Gen 3 chipset) உடன் இந்த புதிய விவோ எஸ்50 ஸ்மார்ட்போன் வெளியாகும். இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

6.59-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் புதிய விவோ எஸ்50 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் விவோ எஸ்50 போன் வெளிவரும். மேலும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

விவோ எஸ்50 ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களும் இந்த விவோ போனில்

இந்த விவோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதி உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ எஸ்50 போன் வெளிவரும்.

டிசைன் அள்ளுதே.. வருகிறது புது விவோ போன்.. எந்த மாடல்?

6040mAh பேட்டரி வசதியுடன் விவோ எஸ்50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட், வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய விவோ போனில் உள்ளன. விவோ எஸ்50 ப்ரோ போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credits: gizmochina

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo S50 images and key specifications leaked: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X