டைமண்ட் வடிவிலான கேமரா வசதியுடன் விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டைமண்ட் வடிவில் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களை விட சற்று வித்தயசமான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது இந்த விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ எஸ்5 டிஸ்பிளே வசதி
விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் யுஆழுடுநுனு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

அசத்தலான சிப்செட் வசதி
விவோ எஸ்5 ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 712 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

சேமிப்பு வசதி
இந்த ஸ்மாரட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தவிவோ எஸ்5 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கேமரா வசதி
விவோ எஸ்5 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி சென்சார் + 5எம்பி சென்சார் +2எம்பி சென்சார் எனநான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
விவோ எஸ்5 ஸ்மார்ட்போனில் 4010எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 22.5வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும்உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வைஃபை, வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறுஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அட்டகாசமான விலை
இந்திய மதிப்பில்...
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் விலை (2698 Yuan) ரூ.27,650-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் விலை(2998 Yuan) ரூ.30,650-ஆக உள்ளது.
விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications