பின்றானே இவன்.. மிட்-ரேஞ்ல 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 50MP டெலிபோட்டோ.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பும் கஸ்டமர்களை ஒட்டுமொத்தமாக தட்டித்தூக்கும்படி விவோ எஸ்30 (Vivo S30) வெளியாகி இருக்கிறது. 6500mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி டெலிபோட்டோ, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் கொடுக்கிறது. இந்த விவோ போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
விவோ எஸ்30 அம்சங்கள் (Vivo S30 Specifications): இந்த விவோ போனில் சோனி எல்ஒய்டி700வி (SONY LYT700V) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. இந்த மெயின் கேமராவுக்கு 8 எம்பி அல்ட்ரா வைடு மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்882 (SONY IMX882) சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கிடைக்கிறது.

ஆட்டோ போகஸ் சப்போர்ட் கொண்ட 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கிறது.
இந்த விவோ எஸ்30 போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது. ஓர்ஜின்ஓஎஸ் 5 (OriginOS 5) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேக் செய்யப்பட்டு இருக்கிறது.
மிட்-ரேட்ஞ் மாடலாக இருப்பதால், அதற்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த விவோ எஸ்30 போனின் பேட்டரி சிஸ்டமானது பட்டையை கிளப்பும் பேக்கப் கொடுக்கும்படி இருக்கிறது.
ஏனென்றால், 6500mAh பேட்டரி மட்டுமல்லாமல், அதற்கு 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மற்ற பீச்சர்களை பார்க்கையில், ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (On-display Fingerprint Sensor), IP64 ரேட்டிங் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், டைப்-சி ஆடியோ & ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளது.
பீச் ஃபிங்க் (Peach Pink), மின்ட் கிரீன் (Mint Green), லெமன் எல்லா (Lemon Yellow), கோகோ பிளாக் (Cocoa Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.31,958ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,510ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.39,070ஆக இருக்கிறது.
இந்த விலையுடன் சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ஜூன் 6ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, மேற்கண்ட விலைகளும் சீனாவின் யுவான் அடிப்படையில் இந்திய ரூபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. குளோபல் வெளியீட்டுக்கு பிறகு மற்ற மார்கெட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








