வாடா செல்லம்.. உனக்கு தான் வெயிட்டிங்.. சோனி கேமரா.. 6500mAh பேட்டரி.. புது Vivo 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
விவோ (vivo) நிறுவனம் தனது புதிய விவோ எஸ்30 (Vivo S30) மற்றும் விவோ எஸ்30 ப்ரோ மினி (Vivo S30 Pro Mini) ஸ்மார்ட்போன்களை வரும் மே 29-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்தியா மற்றும் உலக சந்தைகளில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அறிமுகத்திற்கு முன்பு விவோ எஸ்30 மற்றும் விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போன்களின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

விவோ எஸ்30 ப்ரோ மினி அம்சங்கள் (Vivo S30 Pro Mini Specifications): 6.31-இன்ச் 1.5கே ரெசல்யூஷன் எல்டிபிஒ ஒஎல்இடி (1.5K resolution LTPO OLED) டிஸ்பிளே வசதியுடன் விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் டைமன்சிட்டி 9400இ சிப்செட் (Dimensity 9400e chipset) உடன் இந்த புதிய விவோ எஸ்30 ப்ரோ மினி போன் வெளிவரும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போன். இதில் சோனி IMX882 பெரிஸ்கோப் சென்சார் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6500எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
விவோ எஸ்30 அம்சங்கள் (Vivo S30 Specifications): 6.75-இன்ச் 1.5கே ரெசல்யூஷன் எல்டிபிஒ ஒஎல்இடி (1.5K resolution LTPO OLED) டிஸ்பிளே வசதியுடன் விவோ எஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட் உடன் இந்த புதிய விவோ எஸ்30 போன் வெளிவரும். மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ எஸ்30 ஸ்மார்ட்போன். இதில் சோனி ஐஆஓ882 பெரிஸ்கோப் சென்சார் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
மேலும் 6500mAh பேட்டரி உடன் விவோ எஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக விவோ எஸ்30 மற்றும் விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய விவோ போன்கள் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








