இவரு வேற மாறி ப்ரோ.. 6.31 இன்ச் மினி டிஸ்பிளே.. ஆனால், 6500mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் மெயின் கேமரா, ஆட்டோ போகஸ் செல்பீ ஷூட்டர், 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 6500mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், மீடியாடெக் டைமன்சிட்டி 9300பிளஸ் சிப்செட் கொண்ட மாடலாக விவோ எஸ்30 ப்ரோ மினி (Vivo S30 Pro Mini) வெளியாகி இருக்கிறது. சூப்பர் பெரிஸ்கோப் டெலிபோட்டோவுடன் கிடைக்க இருக்கும் இந்த விவோ எஸ்30 ப்ரோ மினி போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
காம்பாக்ட் டிசைனில் கிடைக்கும் போன்களுக்கு தனியாக ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர்களுக்காகவே ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மினி மாடல்களை களமிறக்கி வருகின்றன. இதில் விவோ நிறுவனத்தின் எஸ்30 ப்ரோ மினி சேர்ந்துள்ளது. 6.31 இன்ச் டிஸ்பிளே கொண்ட பாடியில் 6500mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. 7.99 எம்எம் தடிமன் மற்றும் 186 கிராம் எடை கொண்டுள்ளது.

விவோ வி30 ப்ரோ மினி அம்சங்கள் (Vivo S30 Pro Mini Specifications): இந்த மினி மாடலில் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.31 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. பிரீமியம் சிப்செட் மற்றும் ஜிபியு வருகிறது.
ஆகவே, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9300பிளஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 9300+ 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. அதேபோல லேட்டஸ்ட் ஏஐ பீச்சர்களை கொடுக்கும் ஓர்ஜின்ஓஎஸ் 5 (OriginOS 5) மற்றும் கேமிங் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி இம்மார்டலிஸ் ஜி720 ஜிபியு (Immortalis G720 GPU) கிடைக்கிறது.
இந்த விவோ வி30 ப்ரோ மினி போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் செட்டப் உள்ளது.

மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார் + ஓஐஎஸ் டெக்னாலஜி + 4K வீடியோ ஷூட் கிடைக்கிறது. பெரிஸ்கோப் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்822 சென்சார் மற்றும் 3X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. இதுபோக நைட் போட்டோகிராபி அவுட்புட் கொடுக்க ஆரா லைட் பேக் செய்துள்ளது. இந்த மினி போனில் 50 எம்பி செல்பீ ஷூட்டரானது, ஆட்டோ போகஸ் கொடுக்கிறது.
முன்பே சொன்னதை போல 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 6500mAh பேட்டரியை கொடுக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. ஆகவே, டியூரபிலிட்டி கொண்ட மாடலாகவும் இருக்கிறது. கூல் பெர்ரி பவுடர் (Cool Berry Powder), மின்ட் கிரீன் (Mint Green), லெமன் எல்லோ (Lemon Yellow) அல்லது கோகோ பிளாக் (Cocoa Black) கலரில் வாங்கலாம்.
இந்த விவோ வி30 ப்ரோ மினி போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.41,551ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.45,114ஆகவும் இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.47,493ஆகவும் இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருக்கிறது, ஜூன் 6ஆம் தேதி முதல் ஆர்டர் செய்யலாம். மற்ற மார்கெட்களில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








