Home
Mobile

2025 மே உறுதி.. 50எம்பி செல்பி கேமரா.. 90W சார்ஜிங்.. வருகிறது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ (Vivo) நிறுவனம் தனது விவோ எஸ்30 ப்ரோ மினி (Vivo S30 Pro Mini) ஸ்மார்ட்போனை வரும் மே மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகமாகும். அதன்பின்பு தான் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும்.

டூயல் ரியர் கேமரா வசதியுடன் விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதியும் இந்த விவோ போனில் உள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ எஸ்30 ப்ரோ மினி போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

2025 மே உறுதி.. வருகிறது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ எஸ்30 ப்ரோ மினி அம்சங்கள் (Vivo S30 Pro Mini Specifications): 6.31 இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே (flat AMOLED Display) டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2640 x 1216 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரஷ் ரேட், 1.5கே ரெசல்யூஷன் (1.5K resolution) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த டைமன்சிட்டி 9400இ (Dimensity 9400e) சிப்செட் உடன் விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) வசதியுடன் விவோ எஸ்30 ப்ரோ மினி போன் அறிமுகமாகும். மேலும் 6000mAh பேட்டரியுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ எஸ்30 ப்ரோ மினி வெளிவரும். குறிப்பாக இந்த புதிய விவோ போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo S30 Pro Mini specifications leaked online: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X