OnePlus மினி போன் கதை முடிஞ்சது.. 6,500mAh பேட்டரி உடன் Vivo-வின் புதிய Mini போன்.. என்ன மாடல்? என்ன விலை?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) மாடல் ஆனது "மினி ஸ்மார்ட்போன்" கான்செப்ட்டை பயங்கரமாக பிரபலமாக்கி உள்ளது என்றே கூறலாம். சமீபத்தில் இந்நிறுவனத்தின் காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆக ஒன்பிளஸ் 13டி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இது ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) என்கிற பெயரில் கூடிய விரைவில் (இந்த மே மாதத்திற்குள்) இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில் விவோ நிறுவனமும் - இந்த மே மாதத்திலேயே - ஒரு மினி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிறுவனம் அதன் விவோ எஸ்30 சீரீஸை (Vivo S30 Series) சீனாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

இதில் இரண்டு மாடல்கள் உள்ளன: விவோ எஸ்30 (Vivo S30) மற்றும் "மிகவும் சிறிய" மாடல் ஆன விவோ எஸ்30 ப்ரோ மினி (Vivo S30 Pro Mini). இதில் மினி வேரியண்ட் ஆனது இந்தியாவில் விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதற்கிடையில் டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே: விவோ எஸ்30 ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் அளவிலான பிளாட் ஓஎல்இடி பேனலை கொண்டிருக்கும். மறுகையில் உள்ள எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது 6.31 இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவுடன் வரும். மேலும் 2 மாடல்களிலுமே 6,500mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.
விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போனின் சிப்செட்: இது இன்னும் அறிவிக்கப்படாத மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் கடந்த மே 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட டைமன்சிட்டி 9300 பிளஸ் சிப்செட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போனின் கேமரா: இது சோனி IMX882 சென்சார்உடனான உடனான 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை கொண்டிருக்கலாம். முந்தைய அறிக்கையின்படி, இதன் ரியர் கேமரா செட்டப்பில் 50-மெகாபிக்சல் + 8-மெகாபிக்சல் + 50-மெகாபிக்சல் டிரிபிள் கேமரா இடம்பெறும்
விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போனின் விலை: இந்த ஸ்மார்ட்போன் ஒரு மெட்டல் மிடில் பிரேம் மற்றும் ஒரு எக்ஸ் -ஆக்சிஸ் லீனியர் மோட்டார் ஆகியவைகளையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ, கோல்ட், பிங்க் மற்றும் பிளாக் 4 கலர்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை இது ரூ.44,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
சீனாவில் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இது மார்னிங் மிஸ்ட் கிரே, ஹார்ட்-த்ரே பிங்க் மற்றும் கிளவுடி இங்க் பிளாக் ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.39,805 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.42,150 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.44,490 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.46,835 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக உள்ள ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.52,690 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








