Home
Mobile

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. சோனி கேமரா.. 6500mAh பேட்டரி.. புது Vivo 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் புதிய விவோ எஸ்30 (vivo S30) மற்றும் விவோ எஸ்30 ப்ரோ மினி (vivo S30 Pro mini) ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போன்கள் விரைவில் இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இப்போது இந்த இரண்டு புதிய விவோ ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ எஸ்30 அம்சங்கள் (vivo S30 Specifications): 6.7-இன்ச் 1.5கே பிளாட் அமோலெட் டிஸ்பிளே (1.5K flat AMOLED) உடன் இந்த விவோ எஸ்30 போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800×1260 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. மேலும் ஓர்ஜின்ஓஎஸ்5 (OriginOS 5) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது.

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. . புது Vivo 5ஜி போன் அறிமுகம்..

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Qualcomm Snapdragon 7 Gen 4) சிப்செட் உடன் விவோ எஸ்30 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display optical fingerprint sensor) மற்றும் IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

50எம்பி சோனி எல்ஒய்டி700வி (Sony LYT700V) மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் விவோ எஸ்30 போனில் உள்ளது. மேலும் 50எம்பி செல்பி கேமரா, யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது.

6500mAh பேட்டரி மற்றும் 90w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி விவோ எஸ்30 போனில் உள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.4, வைஃபை 802.11 ஏசி, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ எஸ்30 போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 192 கிராம் ஆகும்.

விவோ எஸ்30 ப்ரோ மினி அம்சங்கள் (vivo S30 Pro mini Specifications): 6.7-இன்ச் 1.5கே எல்டிபிஒ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே உடன் இந்த விவோ எஸ்30 ப்ரோ மினி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2640 x 1216 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. மேலும் ஓர்ஜின்ஓஎஸ்5 (OriginOS 5) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது.

ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 9300 பிளஸ் 4என்எம் (Octa-Core Dimensity 9300+ 4nm) சிப்செட் உடன் விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இம்மார்டலிஸ் ஜி720 ஜிபியு (Immortalis G720 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display optical fingerprint sensor) மற்றும் IP69 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) மெயின் சென்சார + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற டூயல் ட்ரிபிள் கேமரா செட்டப் விவோ எஸ்30 ப்ரோ மினி போனில் உள்ளது. மேலும் 50எம்பி செல்பி கேமரா, யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது.

6500mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி விவோ எஸ்30 ப்ரோ மினி போனில் உள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.4, வைஃபை 802.11 பிஇ என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ எஸ்30 ப்ரோ மினி போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 186 கிராம் ஆகும்.

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. . புது Vivo 5ஜி போன் அறிமுகம்..

விவோ எஸ்30 விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்30 மாடலின் விலை 2699 yuan (இந்திய மதிப்பில் ரூ.32,015)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்30 மாடலின் விலை 2999 yuan (இந்திய மதிப்பில் ரூ.35,015)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்30 மாடலின் விலை 3299 yuan (இந்திய மதிப்பில் ரூ.39,015)

விவோ எஸ்30 ப்ரோ மினி விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்30 ப்ரோ மினி மாடலின் விலை 3499 yuan (இந்திய மதிப்பில் ரூ.41,500)
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்30 ப்ரோ மினி மாடலின் விலை 3799 yuan (இந்திய மதிப்பில் ரூ.45,035)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்30 ப்ரோ மினி மாடலின் விலை 3999 yuan (இந்திய மதிப்பில் ரூ.47,405)
ஜூன் 6 முதல் சீனாவில் இந்த புதிய விவோ போன்கள் சீனாவில் விற்பனைக்கு வருகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
vivo S30 and S30 Pro mini launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X