Home
Mobile

அடுத்த Vivo 5ஜி போன் ரெடி.. 80W சார்ஜிங்.. 50எம்பி செல்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் அடுத்து விவோ எஸ்20 (Vivo S20) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் தற்போது TENAA தளத்தில் V2429A என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. எனவே வரும் நாட்களில் சீனாவில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும். சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் இந்த புதிய விவோ போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ எஸ்20 அம்சங்கள் (Vivo S20 Specifications): 6.67-இன்ச் 1.5கே அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த விவோ எஸ்20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் 10 பிளஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

அடுத்த Vivo 5ஜி போன் ரெடி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

அதேபோல் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட் உடன் விவோ எஸ்20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த சிப்செட். அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 720 ஜிபுயு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ எஸ்20 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ எஸ்20 போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்ற 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6, புளூடூத் 5.4 (Bluetooth 5.4), பெய்டோ (Beidou), ஜிபிஎஸ் (GPS), க்ளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C), என்எப்சி (NFC) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ போனில் உள்ளன.

விவோ எஸ்20 ஆனது ஒரு பெரிய 6500mAh பேட்டரி உடன் வெளிவரும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

source

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo S20 will be launched with Snapdragon 7 Gen 3: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X