இதுதான் புதிய Vivo போன்.. சோனி கேமரா.. ஒஎல்இடி டிஸ்பிளே.. 16ஜிபி ரேம்.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் விரைவில் விவோ எஸ்20 சீரிஸ் (Vivo S20 series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது விவோ எஸ்20 மற்றும் விவோ எஸ்20 ப்ரோ மாடல்களை இந்த மாதம் இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம். குறிப்பாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்த போன்கள் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் விவோ எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இதில் ஒரு போன் டூயல் ரியர் கேமரா மற்றும் மற்றொரு போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன. மேலும் ஆரா லைட் எல்இடி ப்ளாஷ், 100x ஜூம் உள்ளிட்ட அம்சங்களும் இந்த போன்களில் உள்ளன.

விவோ எஸ்20 ப்ரோ அம்சங்கள் (Vivo S20 Pro Specifications): டைமன்சிட்டி 9300 பிளஸ் (Dimensity 9300 Plus) சிப்செட் உடன் விவோ எஸ்20 ப்ரோ அறிமுகம் செய்யப்படும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் விவோ எஸ்20 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
6.67-இன்ச் ஒஎல்இடி எல்டிபிஎஸ் (OLED LTPS) டிஸ்பிளே கொண்டுள்ளது விவோ எஸ்20 ப்ரோ போன். 2800 x 1260 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate) மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன. 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ எஸ்20 ப்ரோ போன்.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 பிரைமரி கேமரா (Sony IMX921 primary camera) + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி ஐஎம்எக்ஸ் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் இந்த போனின் ரியர் கேமராக்களில் 100x ஜூம் வசதி உள்ளது. 50எம்பி செல்பி கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது.
அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) ஆதரவுகளுடன் இந்த விவோ எஸ்20 ப்ரோ போன் வெளிவரும்.
6500mAh பேட்டரி உடன் விவோ எஸ்20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
விவோ எஸ்20 அம்சங்கள் (Vivo S20 Specifications): 6.67-இன்ச் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் இந்த விவோ எஸ்20போன் அறிமுகம் செய்யப்படும். 2800 x 1260 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
குறிப்பாக விவோ எஸ்20 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட் உடன் அறிமுகமாகும். அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது.

6500mAh பேட்டரி உடன் இந்த விவோ எஸ்20 அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.
குறிப்பாக விவோ எஸ்20 மற்றும் விவோ எஸ்20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய போன்கள்.
photo credit: vivo, 91mobiles, phonebunch


Click it and Unblock the Notifications