இந்த Vivo போனுக்கு இந்தியாவே வெயிட்டிங்.. சோனி கேமரா, 90W சார்ஜிங், OLED டிஸ்பிளே.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் இந்த மாதம் இறுதியில் விவோ எஸ்20 ப்ரோ (Vivo S20 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் விவோ எஸ்20 ப்ரோ போனின் அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
விவோ எஸ்20 ப்ரோ அம்சங்கள் ( Vivo S20 Pro Specifications): 6.7-இன்ச் ஒஎல்இடி எல்டிபிஎஸ் (OLED LTPS) டிஸ்பிளே உடன் இந்த விவோ எஸ்20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800 x 1260 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 பிரைமரி கேமரா (Sony IMX921 primary camera) + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி ஐஎம்எக்ஸ் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் இந்த போனின் ரியர் கேமராக்களில் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் (3x optical zoom) வசதி உள்ளது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன்.
சக்திவாய்ந்த டைமன்சிட்டி 9300 பிளஸ் (Dimensity 9300 Plus) சிப்செட் உடன் விவோ எஸ்20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த சிப்செட். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் விவோ எஸ்20 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ எஸ்20 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) ஆதரவுகளுடன் இந்த விவோ போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

6500mAh பேட்டரி உடன் விவோ எஸ்20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. குறிப்பாக விவோ எஸ்20 ப்ரோ போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications