கொஞ்சம் பொறுங்க.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 50MP கேமரா.. வருகிறது புது Vivo போன்கள்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் அடுத்து விவோ எஸ்20 (Vivo S20) மற்றும் விவோ எஸ்20 ப்ரோ (Vivo S20 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்த புதிய விவோ எஸ்20 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
விவோ எஸ்20 சீரிஸ் அம்சங்கள் (Vivo S20 series Specifications): 6.67-இன்ச் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் இந்த விவோ எஸ்20 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800 x 1260 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளன. குறிப்பாக இந்த போன்களின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் விவோ எஸ்20 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட் உடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவோ எஸ்20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது டைமன்சிட்டி 9300 (Dimensity 9300) சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ எஸ்20 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விவோ எஸ்20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
6500mAh பேட்டரி உடன் இந்த விவோ எஸ்20 மற்றும் விவோ எஸ்20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த விவோ போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும்.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த விவோ போன்களில் இருக்கும். இதுதவிர யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) ஆதரவுகளுடன் இந்த விவோ எஸ்20 சீரிஸ் போன்கள் வெளிவரும்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி வசதியுடன் இந்த விவோ எஸ்20 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும். மேலும் பன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு இந்த புதிய விவோ போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போன்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த விவோ போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவோ எஸ்20 சீரிஸ் போன்கள் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








