Home
Mobile

இந்த ரெண்டுல ஒன்னை கண்டிப்பா வாங்கணும்.. தூள் கிளப்பும் Vivo S20.. என்ன விலை? என்ன அம்சங்கள்?

விவோ (Vivo) நிறுவனம் விரைவில் விவோ எஸ்20 சீரிஸ் (Vivo S20 series) ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் விவோ நிறுவனம் விவோ S20 (Vivo S20) மற்றும் விவோ S20 ப்ரோ (Vivo S20 Pro) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்களின் அறிமுகத்திற்கு முன்பாக இதன் சிறப்பம்ச விபரங்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகி, விவோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்த போனின் விலை என்ன? மற்றும் இதன் அம்சங்கள் என்ன? என்பதை இப்போது பார்க்கலாம்.

புதிய விவோ S20 (Vivo S20) மற்றும் விவோ S20 ப்ரோ (Vivo S20 Pro) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களை நிறுவனம் நவம்பர் இறுதியில் அறிமுகம் செய்யவுள்ளது. அதாவது வரும் வாரத்தில் இந்த போன்களை நாம் சந்தையில் எதிர்பார்க்கலாம். விவோ S20 (Vivo S20) மற்றும் விவோ S20 ப்ரோ (Vivo S20 Pro) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையில் ஒரு சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை மட்டுமே நாம் பார்க்க முடியும்.

இந்த ரெண்டுல ஒன்னை கண்டிப்பா வாங்கணும்.. தூள் கிளப்பும் Vivo S20..

விவோ S20 (Vivo S20) மற்றும் விவோ S20 ப்ரோ (Vivo S20 Pro):

விவோ S20 (Vivo S20) ஸ்மார்ட்போன் சாதனம் டூயல் கேமரா அம்சத்துடனும் மற்றும் விவோ S20 ப்ரோ (Vivo S20 Pro) சாதனம் ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்துடனும் வருமென்று கூறப்பட்டுள்ளது. இந்த விவோ S20 ஸ்மார்ட்போன் வரிசை சாதனங்களில் நாம் 6.67" இன்ச் BOE Q10 OLED டிஸ்பிளேவை (display) எதிர்பார்க்கலாம். இந்த டிஸ்பிளே 1.5K ரெசொலூஷன் (resolution) உடன் 1,260 x 2,800 பிக்சலை (pixels) கொண்டுள்ளது.

விவோ S20 (Vivo S20) ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Snapdragon 7 Gen 3 chipset) உடன் வெளிவரும். விவோ S20 ப்ரோ (Vivo S20 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் பிளாக்ஷிப் பெர்பார்மென்ஸை வழங்க மீடியாடெக் டைமென்சிட்டி 9300+ சிப்செட்டை (MediaTek Dimensity 9300+ SoC) கொண்டிருக்குமென்று கூறப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 8GB ரேம் உடன் 256GB ஸ்டோரேஜ் உடன் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராவை பொறுத்தவரையில், ப்ரோ வேரியண்ட் மாடல் 50MP கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராவை கொண்டிருக்கும். முகப்பக்கத்தில் இது 50MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6500mAh பேட்டரி உடன் 90W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும்.

விவோ S20 மற்றும் விவோ S20 ப்ரோ (Vivo S20 and Vivo S20 Pro):

விவோ நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போனை சாதனத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விவோ S20 (Vivo S20) மற்றும் விவோ S20 ப்ரோ (Vivo S20 Pro) ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்கள் ரூ. 33,999 விலை முதல் வாங்க கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வரும் டிசம்பர் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo S20 and Vivo S20 Pro Launching Soon Check Price and Specifications Details Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X