ஆஹா எப்படிப்பட்ட Mobile-ப்பா? பட்ஜெட் விலையில் Vivo S20.. ஆரம்ப விலையே இதானா? எப்போ வாங்கலாம்?
விவோ (Vivo) நிறுவனம் புதிதாக விவோ S20 (Vivo S20) மற்றும் விவோ S20 ப்ரோ (Vivo S20 Pro) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடலைகளை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விவோ ரசிகர்களால் பல காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த விவோ S20 (Vivo S20) மற்றும் விவோ S20 ப்ரோ (Vivo S20 Pro) சாதனங்கள் ஒரு வழியாக பட்ஜெட் செக்மென்ட்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றிய முழு தகவலை இப்போது பார்க்கலாம்.
விவோ S20 சிறப்பம்சம் (Vivo S20 Specifications):
புதிய விவோ எஸ்20 (Vivo S20) சாதனம் 6.67" இன்ச் அளவு கொண்ட 2800 ×1260 பிக்சல் (pixels) 1.5K அமோலட் (AMOLED) 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (aspect ratio) பிளாட் அமோலட் டிஸ்பிளேவை இந்த போன் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே HDR10+ சப்போர்ட் உடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate), 3840Hz ஹை-ஃபிரிக்வேன்சி PWM டிம்மிங் (high frequency PWM dimming) மற்றும் 5000 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness) ஆதரவை கொண்டுள்ளது.

இந்த புதிய விவோ S20 ஸ்மார்ட்போன் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7 Gen 3) உடன் 8GB / 12GB / 16GB LPDDR4X ரேம் (RAM) அம்சம் மற்றும் 256GB / 512GB UFS 2.2 ஸ்டோரேஜ் (storage) அம்சத்தை ஆதரிக்கிறது. இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் 5 (Android 15 with OriginOS 5) இயங்குதளத்தில் இயங்குகிறது.
விவோ S20 கேமரா (Vivo S20 Camera):
இது டூயல் சிம் (Dual SIM nano + nano) உடன் இயங்குகிறது. கேமராவை பொறுத்தவரையில், 50MP OV50E சென்சார், OIS, LED fபிளாஷ் உடன் 8MP அல்ட்ரா வைடு கேமராவை கொண்டுள்ளது. ஆரா லைட் (Aura light) உடன் 50MP ஆட்டோபோக்கஸ் முன்பக்க செல்பி கேமராவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், IP64 டஸ்ட் மற்றும் ஸ்பெல்ஸ் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன் இயங்குகிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Speakers), Hi-Res ஆடியோ (audio) போன்ற அம்சங்களுடன் 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 6 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் (Bluetooth 5.4), GPS (L1 + L5), USB Type-C, NFCபோன்ற இணைப்பு அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் வழங்குகிறது. இது 6500mAh பேட்டரி உடன் 80W பாஸ்ட் சார்ஜிங் (fast charging) அம்சத்தை ஆதரிக்கிறது.
விவோ S20 விலை (Vivo S20 Price):
இந்த புதிய விவோ S20 ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசுகையில், இது 4 ஸ்டோரேஜ் வேரியண்ட் விருப்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- விவோ S20 8GB+256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் இந்திய விலை தோராயமாக ரூ. 26,790
- விவோ S20 12GB+256GBஸ்டோரேஜ் மாடல் இந்திய விலை தோராயமாக ரூ. 30,280
- விவோ S20 12GB+512GB ஸ்டோரேஜ் மாடல் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 32,610
- விவோ S20 16GB+512GB ஸ்டோரேஜ் கொண்ட ஹை-எண்டு மாடல் விலை தோராயமாக ரூ. 34,940 மட்டுமே.
இந்த போன்கள் சீனாவில் வரும் டிசம்பர் 6, 2024 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கிறது. ப்ரோ மாடல் விலை ரூ. 39,600 முதல் துவங்கி ரூ. 46,590 வரை செல்கிறது. இதன் விற்பனை டிசம்பர் 12, 2024 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கிறது. இதற்கு நடுவே அல்லது இதற்கு பிறகு இந்த இரண்டு மாடல் போன்களும் இந்திய சந்தைக்குள் விற்பனை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications