Home
Mobile

வெளுத்து கட்டிய விவோ.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 7050mAh பேட்டரி.. 44W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொண்ட மாடலாக வெளியாக இருக்கும் விவோ எஸ்2 (Vivo S2) ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் கசிந்துள்ளன. வெளியீட்டுக்கு முன்பே ரீடெயில் பாக்ஸ் விவரங்கள் கசிந்து, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியது. கிட்டத்தட்ட 7 வருடங்களாக அடுத்த மாடல் வெளியாகாமல் இருந்தது. இப்போது, இந்த ஆகஸ்ட் மாதத்தில் விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. விவோ இந்தியா தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு, கேமரா டிசைன் மற்றும் கலர் விவரங்கள் உறுதியாகின.

வெளுத்து கட்டிய விவோ.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 7050mAh பேட்டரி!

ஓர்ஜின் ஓஎஸ் கிடைக்க இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், வெளியீட்டு தேதி மற்றும் விலை விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை. இந்த நேரத்தில் விவோ எஸ்2 ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் விவரங்கள் கசிந்துள்ளன. இதில் முக்கிய பீச்சர்கள் மட்டுமல்லாமல், விலை விவரங்களும் கசிந்துள்ளன. முதலில் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

விவோ எஸ்2 அம்சங்கள் (Vivo S2 Specifications): 6.83 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 1.5K ரெசொலுஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 (Octa Core MediaTek Dimensity 7360) சிப்செட் கிடைக்க இருக்கிறது. ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க இருக்கிறது. இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7050mAh பேட்டரியை கொடுக்க இருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IM852) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது.

32 எம்பி செல்பீ கேமராவுடன் இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. பிரீமியம் டியூரபிலிட்டி கொடுக்க IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.66,999ஆக இருக்கிறது. இது ரீடெயில் பாக்ஸ் வழியாக தெரியவந்த விலையாக இருக்கிறது. ஆகவே, மாறுபட வாய்ப்புள்ளது.

முன்னதாக வெளியான விவோ எஸ்1 ஸ்மார்ட்போனில் 6.38 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைத்தது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 12என்எம் (Octa Core MediaTek Helio P65 12nm) சிப்செட்டை கொடுக்கிறது. ஆர்ம் மாலி ஜி52 ஜிபியு (ARM Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்து இருக்கிறது. ஆண்ட்ராய்டு 9 ஓஎஸ் கிடைத்தது.

பன்டச்ஓஎஸ் 9 கிடைத்தது. சோனி ஐஎம்எக்ஸ்499 (Sony IMX499) சென்சாருடன் 13 எம்பி செல்பீ கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4500mAh பேட்டரி கிடைக்கிறது. ரூ.18,990 விலைக்கு வந்தது. இதைவிட பல மடங்கு கூடுதலாக எஸ்2 இருக்கும்.

Best Mobiles in India

English summary
Vivo S2 With OriginOS 6 Retail Box Revealed Price Key Specifications Ahead of India Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X