Home
Mobile

நாடே எதிர்பார்த்த விவோ 5ஜி போனை நாளை அறிமுகம்.. 7050எம்ஏஎச் பேட்டரி.. சோனி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்2 (Vivo S2) ஸ்மார்ட்போனை நாளை (ஆகஸ்ட் 6) அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் நாளை மதியம் 12 மணி அளவில் அறிமுகமாகும். அதன்பின்பு பிளிப்கார்ட் தளத்தில் இந்த புதிய விவோ போன் விற்பனைக்கு வரும். இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

விவோ எஸ்2 அம்சங்கள் (Vivo S2 specifications): 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நாடே எதிர்பார்த்த விவோ 5ஜி போனை நாளை அறிமுகம்.. எந்த மாடல்?

மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ சிப்செட் உடன் இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

குறிப்பாக 50எம்பி சோனி மெயின் கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதுவும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது விவோ எஸ்2 ஸ்மார்ட்போன். மேலும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

நாடே எதிர்பார்த்த விவோ 5ஜி போனை நாளை அறிமுகம்.. எந்த மாடல்?

விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் 7050எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

மேலும் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. சஃபையர் ப்ளூ (Sapphire Blue), ரெகல் ப்ரோன்ஸ் (Regal Bronze), சில்க் ஒயிட் (Silk White) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போன் ரூ.50,000-கீழ் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo S2 with 7050mAh battery to be launched in India tomorrow: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X