Home
Mobile

மிட்-ரேஞ்ச் மிரளுது.. ரூ.2000 ஆஃபர் ரேட்ல 7050mAh பேட்டரி Vivo போன்.. 44W சார்ஜிங்.. 3D டிஸ்பிளே.. எந்த மாடல்?

3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 7050mAh பேட்டரி கொண்ட மாடலாக களமிறங்கிய விவோ எஸ்2 (Vivo S2) ஸ்மார்ட்போன் இப்போது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.

3டி கர்வ்ட் டிஸ்பிளே கிடைத்தால், அது ஸ்லிம் மாடலாக இருக்கும். ஆகவே, அதில் பெரிய பேட்டரியை எதிர்பார்க்க முடியாது. இப்படியே கடந்த சில வருடங்களாக ஸ்மார்ட்போன்கள் வெளியாகிவந்தன. ஆனால், இப்போது பெரிய பேட்டரி மாடல்களிலேயே 3டி கர்வ்ட் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 7.99 எம்எம் தடிமனுடன் விவோ எஸ்2 களமிறங்கியது.

மிட்-ரேஞ்ச் மிரளுது.. ரூ.2000 ஆஃபர் ரேட்ல 7050mAh பேட்டரி Vivo போன்!

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 40 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.39,999 விலைக்கு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.37,999 விலைக்கு இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் உள்ளது.

விவோ எஸ்2 அம்சங்கள் (Vivo S2 Specifications): 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ (4nm Octa Core MediaTek Dimensity 7360 Turbo) சிப்செட் கொண்ட மாடலாக இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட்டு உள்ளது. 3810 எம்எம்² வேப்பர் சேம்பர் கிடைக்கிறது.

6.83 இன்ச் (1260 x 2800 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளேவுடன் கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. 7.99 எம்எம் தடிமன் மற்றும் 197 கிராம் எடை கொடுத்துள்ளது.

சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமராவை இந்ச விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. ஏஐ என்ஹான்ஸ்மெண்ட் (AI Enhancements), ஏஐ எரைஸ் 2.0 (AI Erase 2.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது. நைட் மோட், போர்ட்ராய்டு மோட், பனோரமா மோட், அல்ட்ரா எச்டி மோட் உள்ளிட்ட பீச்சர்களும் கிடைக்கின்றன.

இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. யூஎஸ்பி டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. IP68 + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.

7050mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுத்துள்ளது. ஏஐ கிரியேஷன், ஏஐ கேப்சன், விவோ ஆபீஸ் கிட் உள்ளிட்ட பிரத்யேக பீச்சர்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. சில்க் ஒயிட் (Silk White), சப்பயர் ப்ளூ (Sapphire Blue) மற்றும் ரீகல் ப்ரோன்ஸ் (Regal Bronze) ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Vivo S2 With 7050mAh Battery Available At 40 Percent Discount on Flipkart Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X