Home
Mobile

மிரட்டி விட்டாப்ல.. 3D டிஸ்பிளே.. 7050mAh பேட்டரி.. SONY கேமரா.. 7.99 மி.மீ பாடி.. 32MP செல்பீ.. எந்த மாடல்?

3டி கர்வ்ட் டிஸ்பிளேவை விரும்பும் பிரியர்களை வெயிட்டிங் மோடில் வைத்துள்ள விவோ எஸ்2 (Vivo S2) ஸ்மார்ட்போனின் முக்கிய பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. அமோலெட் டிஸ்பிளே, 7050mAh பேட்டரி, சோனி சென்சார் கேமரா போன்ற ஆல்-ரவுண்டர் மாடலாக இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் இருக்கிறது.

வருகிற ஆகஸ்ட் 6 ஆம் தேதியன்று இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஆரம்பத்திலேயே 3டி கர்வ்ட் டிஸ்பிளே கொண்ட மாடலாக இருக்கும் என்பது போஸ்டர் வழியாக உறுதி செய்யப்பட்டது. ஆனால், கர்வ்ட் டிஸ்பிளே மாடல்களில் வழக்கம்போல பேட்டரி கேபாசிட்டி கம்மியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மிரட்டி விட்டாப்ல.. 3D டிஸ்பிளே.. 7050mAh பேட்டரி.. SONY கேமரா!

இருப்பினும், இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போனானது, 7050mAh பேட்டரியுடன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனாலேயே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. கேமரா பிரியர்களுக்கு ஏற்ப சோனி சென்சார், ஆரா லைட் போர்ட்ராய்டு மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் போன்ற பீச்சர்களையும் கொடுத்துள்ளது. இப்போது, முக்கிய பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன.

விவோ எஸ்2 அம்சங்கள் (Vivo S2 Specifications): 6.83 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 449 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்கிறது. ஆகவே, விவோ ஆபீஸ் கிட் ( vivo Office Kit) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஏஐ கிரியேஷன் (AI Creation), ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட் (AI Transcript Assist) கிடைக்கிறது. மேலும், சர்க்கிள் டூ சர்ச் 2.0 (Circle to Search 2.0) கொடுக்கப்பட்டு உள்ளது. சிமட்ரிக்கல் டூயல் ஸ்பீக்கர்கள் (Symmetrical Dual Speakers) கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ (Octa Core MediaTek Dimensity 7360 Turbo) சிப்செட் கிடைக்கிறது.

7050mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 4கே வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. டூயல் வியூ வீடியோ (Dual View Video) கிடைக்கிறது. ஆரா லைட் போர்ட்ராய்டு (Aura Light Portrait) உள்ளது.

ரியர் கேமராவுக்கு இந்த ஆரா லைட் கிடைப்பதால், நைட் போட்டோகிராபி பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி இருக்கும். 7050mAh பேட்டரியை கொடுத்தும் 7.99 எம்எம் தடிமன் கொண்ட அல்ட்ரா ஸ்லிம் பாடி (Ultra Slim Body) கொடுத்துள்ளது. மெட்டாலிக் லுக் கொடுக்கும்படி பாடி இருக்கிறது. அதேபோல அரிசோன்டல் கேமரா டிசைன் கொடுத்துள்ளது.

இந்த டிசைனுடன் சில்க் ஒயிட் (Silk White), சப்பயர் ப்ளூ (Sapphire Blue) மற்றும் ரீகல் ப்ரோன்ஸ் (Regal Bronze) ஆகிய மூன்று கலர்களில் கிடைக்க இருக்கிறது. இதுவரையில் பார்த்த பீச்சர்களை விவோ நிறுவனமே உறுதி செய்துவிட்டது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட கொஞ்சம் கம்மியான விலைக்கு எதிர்பார்க்கலாம். ஆகஸ்ட் 6 ஆம் தேதியில் முழு விவரம் தெரியவரும்.

Best Mobiles in India

English summary
Vivo S2 With 7050mAh Battery 50 MP Sony Main Sensor Camera Confirmed Ahead of August 6 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X