அடுத்த மாதம் களமிறங்கும் புது Vivo 5ஜி போன்.. 50எம்பி சோனி கேமரா.. ஒஎல்இடி டிஸ்பிளே.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்2 (Vivo S2) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்ட தகவலின்படி, வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். அதன்பின்பு ஆகஸ்ட் 11-ம் தேதி இந்த புதிய போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
அதுவும் இந்த விவோ ஸ்மார்ட்போன் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும். இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ எஸ்2 அம்சங்கள் (Vivo S2 specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7360 சிப்செட் (MediaTek Dimensity 7360 chipset) உடன் இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி சோனி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கறி டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 6.59-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதுவும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது விவோ எஸ்2 ஸ்மார்ட்போன். மேலும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் 7000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
மேலும் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சஃபையர் ப்ளூ, Regal Bronze மற்றும் சில்க் ஒயிட் நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும்.ஆன்லைனில் வெளியான தகவலின்படி, விவோ எஸ்2 போன் ரூ.45,000 விலையில் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo credits: Abhishek Yadav, vivo


Click it and Unblock the Notifications