Home
Mobile

அறிமுகமானது புதிய விவோ 5ஜி போன்.. சோனி கேமரா.. 7050mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

விவோ நிறுவனம் இன்று புதிய விவோ எஸ்2 (Vivo S2) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் வெளியாகி உள்ளது. இப்போது விவோ எஸ்2 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ எஸ்2 அம்சங்கள் (Vivo S2 specifications): 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,260 x 2,800 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

அறிமுகமானது புதிய விவோ 5ஜி போன்.. சோனி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ சிப்செட் உடன் இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 மெயின் கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது விவோ எஸ்2 ஸ்மார்ட்போன். மேலும் IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய விவோ போன் வெளிவந்துள்ளது.

OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த விவோ போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

7050எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, 4ஜி, வைஃபை 5, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. சஃபையர் ப்ளூ (Sapphire Blue), ரெகல் ப்ரோன்ஸ் (Regal Bronze), சில்க் ஒயிட் (Silk White) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

அறிமுகமானது புதிய விவோ 5ஜி போன்.. சோனி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

விவோ எஸ்2 விலை மற்றும் விற்பனை
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்2 மாடலின் விலை ரூ.39,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்2 மாடலின் விலை ரூ.44,999-ஆக உள்ளது.

வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்த புதிய விவோ விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோர் வழியாக இந்த புதிய விவோ போனை வாங்க முடியும்.

source 1

Best Mobiles in India

English summary
Vivo S2 smartphone launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X