Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. 10000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டின் முதலாவது 10000mAh பேட்டரி மாடலான விவோ எஸ்2 எப்இ (Vivo S2 FE) ஸ்மார்ட்போனின் விற்பனை நாளை தொடங்குகிறது. பெரிய பேட்டரி எதிர்பார்க்கும் கஸ்டமர்களிடையே வரவேற்பை பெற வாய்ப்புள்ளது. இந்த விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

நள்ளிரவு 12 மணி முதல் இந்த விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38,999 ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.42,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு தள்ளுபடி கிடைக்கிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. 10000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. மாடல்?

இதுபோக ரூ.1,000 கேஷ்பேக் கிடைக்கிறது. 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. 10 சதவீத எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் தளங்களுக்கு ஏற்ப ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு அல்லது எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு தள்ளுபடி கொடுக்கப்படும். இப்போது, முழு பீச்சர்களையும் தெரிந்து கொள்ளலாம்.

விவோ எஸ்2 எப்இ அம்சங்கள் (Vivo S2 FE Specifications): 6.83 இன்ச் (1260 x 2800 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 2000 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300இ 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7300e 6nm) சிப்செட் கிடைக்கிறது.

மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், 2 எம்பி செகண்டரி கேமராவுடன் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) கொடுத்துள்ளது. ஆரா லைட் (Aura Light) கொண்டுள்ளது. இந்த விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போனில் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போனில் யூஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது. லேட்டஸ்ட் மாடல்களில் கிடைக்கும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது.

44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.59 எம்எம் தடிமன் மற்றும் 225 கிராம் எடை கொடுத்துள்ளது. ஜென் ஒயிட் (Zen White), டைட்டன் பிளாக் (Titan Black) மற்றும் ஸ்டெல்லர் கிரீன் (Stellar Green) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 6 மற்றும் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டிகள் உள்ளன.

Best Mobiles in India

English summary
Vivo S2 FE With 10000mAh Battery Available From October 20 in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X