நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய விவோ 5ஜி போன்.. 10000mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ எஸ்2 எப்இ (Vivo S2 FE) ஸ்மார்ட்போன் நாளை (அக்டோபர் 6) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் இந்த போன் அறிமுகமாகும். அதன்பின்பு பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த விவோ போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ எஸ்2 எப்இ அம்சங்கள் (Vivo S2 FE specifications): தரமான டைமன்சிட்டி 7300இ (Dimensity 7300e) சிப்செட் உடன் விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

6.83-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2000 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), எச்டிஆர் 10 பிளஸ், 1.07 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
இந்த விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 மெயின் கேமரா + 2எம்பி bokeh சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியும் இந்த விவோ போனில் உள்ளது.
புதிய விவோ ஸ்மார்ட்போன் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வெளிவரும். எமரால்டு கிரீன், ஆப்டர்குளோ பிங்க், டான் பிளாக் ஆகிய கலர்களில் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போன் 10000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
மேலும் 5ஜி, வைஃபை, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ எஸ்2 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
