Home
Mobile

அக்.6 குறிச்சாச்சு.. 10000mAh பேட்டரி.. SONY கேமரா.. 44W ஃபாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் இருக்கும் விவோ பிரியர்களுக்கு வருகிற அக்டோபர் மாதம் டபுள் ட்ரீட் என்றே சொல்ல வேண்டும். வி சீரிஸ் மற்றும் எஸ் சீரிஸ் ஆகியவற்றில் தலா 1 மாடல் வெளியாக இருக்கிறது. இதில் எஸ் சீரிஸ் மாடலில் 10000mah பேட்டரி கிடைக்க இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த மாடல்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

விவோ வி80 (Vivo V80) ஸ்மார்போன் வருகிற அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இதனால், முக்கிய பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஜீஸ் கேமரா சிஸ்டம், 7200mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. இப்போது, டபுள் ட்ரீட்டாக விவோ எஸ்2 எப்இ (Vivo S2 FE) மாடலும் வெளியாக இருக்கிறது.

அக்.6 குறிச்சாச்சு.. 10000mAh பேட்டரி.. SONY கேமரா.. 44W சார்ஜிங்!

அதே அக்டோபர் 6ஆம் தேதியன்று இந்த விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், பீச்சர்கள் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், மார்கெட்டில் பீச்சர்கள் மட்டுமல்லாமல், ரீடெயில் பாக்ஸ் விவரங்களும் கசிந்து, பட்ஜெட்டும் தெரியவந்துள்ளது.

விவோ எஸ்2 எப்இ அம்சங்கள் (Vivo S2 FE Specifications): 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்க இருக்கிறது. மேலும், 2000 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொடுக்கப்பட இருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300இ 5ஜி (Octa Core MediaTek Dimensity 7300e 5G) சிப்செட் கொடுக்கப்பட உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா கொண்ட மாடலாக இந்த விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மெயின் கேமராவுக்க சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சார் கிடைக்க உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி கேமரா வர இருக்கிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10000mah பேட்டரி கிடைக்க இருக்கிறது.

3800எம்எம்² அல்ட்ரா லார்ஜ் விசி கூலிங் சிஸ்டம் கொடுக்கப்பட உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓரிஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) கொடுக்கப்பட இருக்கிறது. 3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது.

IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. விவோ நிறுவனம் இதை உறுதி செய்யவில்லை. அதேபோல இந்த விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது. இதன் விலை ரூ.39,999ஆக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த விலை விவரங்களும் ரீடெயில் பாக்ஸ் கசிந்து தெரியவந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை. இருப்பினும், அதே தேதியில் வெளியாக இருக்கும் விவோ வி80 ஸ்மார்ட்போனின் முக்கிய பீச்சர்கள் விவோ தளத்திலேயே உறுதியாகி இருக்கின்றன. இதை பார்க்கையில், 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.

ஜீஸ் ஆப்டிஸ் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்க உள்ளது. 50 எம்பி செல்பீ கிடைக்க உள்ளது. மல்டி போகல் போர்ட்ராய்டு சப்போர்ட் கொடுக்கிறது. ஏஐ கிரியேடிவ் கேமரா (AI Creative Camera) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்க இருக்கின்றன. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7200mAh பேட்டரி கொடுக்கப்பட உள்ளது. 144Hz அமோலெட் டிஸ்பிளே கிடைக்க உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo S2 FE Launching in India on October 6 Key Specifications Price Leaked Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X