10000எம்ஏஎச் பேட்டரி உடன் புதிய 5ஜி போனை அறிமுகம் செய்த Vivo.. எந்த மாடல்? என்ன விலை?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்2 எப்இ (Vivo S2 FE) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 10000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, டைனம்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது புதிய விவோ போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ எஸ்2 எப்இ அம்சங்கள் (Vivo S2 FE specifications): 6.83-இன்ச் 1.5கே AMOLED Q10 + டிஸ்பிளே உடன் விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2000 நிட்ஸ் பிரைட்னஸ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

மீடியாடெக் டைமன்சிட்டி 7300இ 5ஜி (MediaTek Dimensity 7300e 5G) சிப்செட் உடன் விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 மெயின் கேமரா + 2எம்பி bokeh சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என 2 வேரியண்ட்களில் விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். வெப்ப மேலாண்மைக்காக 3800 sq mm 'வேப்பர் சேம்பர்' (vapour chamber) கூலிங் டெக்னாலஜி ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.
இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட அம்சங்களும் இந்த விவோ போனில் உள்ளன.
புதிய விவோ ஸ்மார்ட்போன் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வெளியாகி உள்ளது. ஸ்டெல்லர் கிரீன், டைட்டன் பிளாக் மற்றும் ஜென் ஒயிட் ஆகிய கலர்களில் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போன் 10000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, வைஃபை, புளூடூத் 5.4,யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ எஸ்2 எப்இ ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆக்சிலரோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார், இ-காம்பஸ் மற்றும் கைரோஸ்கோப் உள்ளிட்ட பல சென்சார் வசதிகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 225 கிராம் ஆகும்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்2 எப்இ போனின் விலை ரூ.38,999-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.42,999-ஆக உள்ளது. வரும் அக்டோபர் 20 முதல் பிளிப்கார்ட், விவோ இந்தியா இணையதளம் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் இந்த புதிய விவோ போன் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications
