Home
Mobile

தலைவன் வேற மாதிரி.. 3D டிஸ்பிளே.. 7050mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

விவோ பிரியர்களுக்கு அடுத்த சில வாரங்களுக்கு அப்டேட் மேல் அப்டேட் கிடைக்க இருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு எஸ் சீரிஸ் மாடல் களமிறங்க இருக்கிறது. பேட்டரி, டிஸ்பிளே, சிப்செட் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் கவனம் செலுத்தும்படியான மாடலாக இது இருப்பது தெரிகிறது. இப்போது பீச்சர்கள் மட்டுமல்லாமல், விலையும் கசிந்துள்ளது.

விவோ எஸ் சீரிஸ் கீழ் விவோ எஸ்2 (Vivo S2) வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. ஆனால், 6 வருடங்களுக்கு மேலாகியும் அடுத்த மாடல் வெளியாகவில்லை. ஆகவே, இப்போது விவோ எஸ்2 வெளியாக இருப்பதால், அதில் கிடைக்கும் பீச்சர்கள் மீது ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டின் கவனமும் இருக்கிறது.

தலைவன் வேற மாதிரி.. 3D டிஸ்பிளே.. 7050mAh பேட்டரி.. 44W சார்ஜிங்!

இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டவில்லை. இருப்பினும், விரைவில் வெளியாகும் என்று விவோ இந்தியா நிறுவனமே போஸ்டர் வெளியிட்டுள்ளது. ஆகவே, ஓரிரு வாரங்களில் வெளியாக இருப்பது உறுதியாகும். இந்த நேரத்திலேயே முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன.

ரேம், மெமரி மற்றும் கலர் வேரியண்ட்களின் விவரங்களும் கசிந்துள்ளது. இதை விவோ நிறுவனம் உறுதி செய்யவில்லை. Passionategeekz வழியாக தெரியவந்துள்ளது. 3டி கர்வ்ட் டிஸ்பிளேவுடன் பெரிய பேட்டரி கொண்ட மாடல்களின் பட்டியலில் இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போனும் சேர இருக்கிறது. சிப்செட்டும் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்.

விவோ எஸ்2 அம்சங்கள் (Vivo S2 Specifications): 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ (MediaTek Dimensity 7360 Turbo) சிப்செட் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்ட மாடலாக இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. 7050mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுத்துள்ளது.

சஃபையர் ப்ளூ (Sapphire Blue), ரெகல் ப்ரோன்ஸ் (Regal Bronze) மற்றும் சில்க் ஒயிட் (Silk White) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின விலை ரூ.51,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.55,999 ஆக இருக்கிறது. ஆகவே, மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் இந்த விவோ எஸ்2 வெளியாக இருப்பது தெரிகிறது.

இருப்பினும், 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 7050mAh பேட்டரி மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ போன்ற ஆல்-ரவுண்டர் பீச்சர்களை கொடுத்து இருப்பதால், கேமிங் மற்றும் பர்ஃபாமென்ஸ் விரும்பும் பிரியர்களுக்கு பக்காவான ஆப்ஷனாக இருக்கும். கேமராவில் ஜீஸ் ஆப்டிக்ஸ், ஓஐஎஸ், சோனி சென்சார்கள் இடம்பெற்றால், கேமராவிலும் வரவேற்பை பெறலாம்.

Best Mobiles in India

English summary
Vivo S2 5G With Dual Rear Camera Full Specifications Price Colours Leaked Ahead of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X