அள்ளி கொடுக்கும் அமேசான்.. 7050எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி சோனி கேமரா.. ஆஃபரில் விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?
தற்போது அமேசான் தளத்தில் தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2026 (Amazon Great Indian Festival Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் விவோ எஸ்2 5ஜி ஸ்மாரட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்2 5ஜி ஸ்மார்ட்போன் மாடடலுக்கு 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.42,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.4300 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ எஸ்2 அம்சங்கள் (Vivo S2 specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ சிப்செட் உடன் இந்த விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,260 x 2,800 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 மெயின் கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது விவோ எஸ்2 ஸ்மார்ட்போன். மேலும் IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய விவோ போன் வெளிவந்துள்ளது.
OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த விவோ போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் 7050எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, 4ஜி, வைஃபை 5, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. சஃபையர் ப்ளூ (Sapphire Blue), ரெகல் ப்ரோன்ஸ் (Regal Bronze), சில்க் ஒயிட் (Silk White) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications
