மிரட்டிவிட்டாப்ல விவோ.. பட்ஜெட்ல 12GB ரேம்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
போர்ட்ராய்டு பிரியர்களுக்கான டூயல் ஓம்னிவிஷன் கேமரா சிஸ்டம் மட்டுமல்லாமல், 1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் விவோ எஸ்19 (Vivo S19) போன் வெளியாகி இருக்கிறது.
விவோ எஸ்19 அம்சங்கள் (Vivo S19 Specifications): இந்த விவோவில் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட், பி3 கலர் காமட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ஓம்னிவிஷன் ஓவி50ஈ (OmniVision OV50E) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி ஆன்டி-ஷேக் (Anti-shake) மெயின் கேமரா வருகிறது. ஓம்னிவிஷன் ஓவி08டி10 (OmniVision OV08D10) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் வருகிறது. இதுவொரு ஆட்டோபோகஸ் (Autofocus) கேமரா மாடலாகும்.
இந்த கேமராவில் கிளாசிக் போர்ட்ராய்டு (Classic Portrait), ரோடரி போகஸ் ஸ்பாட் (Rotary Focus Spot), பபிள் ஸ்பாட் (Bubble Spot) போன்ற பீச்சர்கள் வருகின்றன. மல்டி-போகஸ் லென்த் போர்ட்ராய்டு (Multi-focal Length Portrait) மற்றும் 3டி ஸ்டுடியோ லைட் (3D Studio Light) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
ஆகவே, போர்ட்ராய்டு பிரியர்களுக்கு ஏற்ப பிரீமியம் போட்டோகிராபி அவுட்புட் இந்த விவோ எஸ்19 போனில் கிடைக்கும். சாம்சங் ஜேன்1 (Samsung JN1) சென்சார் மற்றும் ஆட்டோபோகஸ் சப்போர்ட் கொண்ட 50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 4 (OriginOS 4) கொண்டிருக்கிறது.

இந்த விவோ எஸ்19 போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 2 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த சிப்செட் மற்றும் கிராபிக்ஸ் கேமிங் பிரியர்களுக்கு மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும். விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது.
இந்த போனில் 4 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்டும் அறிமுகமாகி இருக்கிறது.
கேமராவை போலவே பேட்டரி சிஸ்டம் பிரீமியமாக வந்திருக்கிறது. இந்த விவோ எஸ்19 மாடலின் 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) போர்ட் வருகிறது. பெரிய பேட்டரி இருந்தும், வெறும் 7.19 மிமீ தடிமன் மற்றும் 193 கிராம் எடையில் அல்ட்ரா ஸ்லிம் பாடி வருகிறது.
மிட்-ரேஞ்ச் போன்களில் வழக்கமாக வரும் அண்டர்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ போன்ற சப்போர்ட் வருகிறது. மிஸ்டி ப்ளூ ஒயிட் (Misty Blue White), பீச் ப்ளாசம் ஃபேன் (Peach Blossom Fan) மற்றும் பைன் ஸ்மோக் இங்க் கிரே (Pine Smoke Ink Gery) ஆகிய 3 கலர்கள் கொண்டுள்ளது.
இந்த போனின் 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.29,300ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.31,645ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.35,180ஆகவும் இருக்கிறது. 16 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.38,700ஆக இருக்கிறது. ஜூன் 7ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications








