Home
Mobile

வெளுத்துவிட்ட விவோ.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. DUAL ரெசிஸ்டன்ட்.. 80W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. எந்த போன்?

சோனி சென்சாருடன் டெலிபோட்டோ கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, டூயல் வாட்டர் ரெசிஸ்டன்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 80W சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் விவோ எஸ்19 ப்ரோ (Vivo S19 Pro) வந்துள்ளது.

விவோ எஸ்19 ப்ரோ அம்சங்கள் (Vivo S19 Pro Specifications): இந்த விவோவில் சோனி ஐஎம்எக்ஸ்912 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி வருகிறது. ஓம்னிவிஷன் ஓவி08டி01 (OmniVision OV08D10) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.

வெளுத்துவிட்ட விவோ.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. DUAL ரெசிஸ்டன்ட் போன்!

சோனி ஐஎம்எக்ஸ்816 (Sony IMX816) சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ போர்ட்ராய்டு (Telephoto Portrait) கேமரா வருகிறது. மெயின் கேமரா மற்றும் டெலிபோட்டோவில் ஆன்டி-ஷேக் சப்போர்ட் வருகிறது. 50 எம்பி ஆட்டோபேகஸ் (Auto Focus) செல்பீ கேமராவானது, சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் வருகிறது.

இந்த விவோ எஸ்19 ப்ரோ போனில் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (3D Curved AMOLED Display) வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), பி3 கலர் காமட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

ஓர்ஜின்ஓஎஸ் 4 (OriginOS 4) கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 9200பிளஸ் 4என்எம் (Octa Core Dimensity 9200+ 4nm) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் இம்மார்டலிஸ் ஜி715 ஜிபியு (Immortalis G715 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 4 வேரியண்ட்களில் வந்துள்ளது.

வெளுத்துவிட்ட விவோ.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. DUAL ரெசிஸ்டன்ட் போன்!

ஆகவே, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வருகின்றன. அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப் வேரியண்ட்டும் வருகிறது. எஸ்டி கார்டு சிலாட் கிடையாது. டூயல் சிம் சிலாட் மட்டுமே கொண்டிருக்கிறது.

இந்த விவோ எஸ்19 ப்ரோ போனில் IP68 மற்றும் IP69 கொண்ட டூயல் வாட்டர் ரெசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த விவோவில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) சப்போர்ட் வருகிறது.

5500mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. ஆன்டி-டிராப் (Anti-drop) மற்றும் ஆன்டி-ஸ்க்ராட்ச் (Anti-scratch) சப்போர்ட் கொண்ட பேக் பேனல் வருகிறது. மிஸ்டி ப்ளூ (Misty Blue), கிரீன் மவுண்டெய்ன்ஸ் (Green Mountains) மற்றும் ஸ்வார்ட் ஷேடோ கிரே (Sword Shadow Gray) மூன்று கலர்களில் இந்த விவோ மாடல் வெளியாகியிருக்கிறது.

இந்த விவோவின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.38,700ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.41,045ஆகவும் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.44,560ஆகவும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.46,910ஆக இருக்கிறது.

இப்போது, சீனாவில் வெளியாகி இருக்கிறது. வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் அங்கு விற்பனை தொடங்குகிறது. அதன்பின் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் ஜூன் மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளது. அதேபோல விலையும் சீனா வேரியண்ட்டை போலவே இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo S19 Pro With 50MP Camera, 16GB RAM Launched Sale From June 7 in China Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X