Home
Mobile

தெறிக்கவிடும் 3 புதிய விவோ போன்கள்.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது எஸ்18 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் டிசம்பர் 14-ம் தேதி மதியம் 12 மணிக்கு விவோ எஸ்18, விவோ எஸ்18இ, விவோ எஸ்18 ப்ரோ மற்றும் TWS 3இ இயர்பட்ஸ் உள்ளிட்ட சாதனங்களைச் சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம்.

குறிப்பாக இந்த புதிய விவோ போன்கள் விரைவில் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த மூன்று போன்களும் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த மூன்று போன்களின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

தெறிக்கவிடும் 3 புதிய விவோ போன்கள்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

விவோ எஸ்18இ அம்சங்கள் (Vivo S18e specifications): 4800 எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த விவோ எஸ்18இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கிளவுட் காஸ் ஒயிட்(Cloud Gauze White), க்ளோ பர்பில் (Glow Purple) மற்றும் ஸ்டாரி நைட் பிளாக் (Starry Night Black) நிறங்களில் இந்த விவோ போன் அறிமுகம் செய்யப்படும்.

ஒஐஎஸ்(OIS) ஆதரவு கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ எஸ்18இ ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனில் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. இதுதவிர பிளாட் டிஸ்ப்ளே வசதியுடன் இந்த அசத்தலான விவோ எஸ்18இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

விவோ எஸ்18 (Vivo S18), விவோ எஸ்18 ப்ரோ (Vivo S18 Pro) அம்சங்கள்: விவோ எஸ்18 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3( Snapdragon 7 Gen 3) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு விவோ எஸ்18 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் டைமன்சிட்டி 9200 பிளஸ்( Dimensity 9200 Plus) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் (Red), பிளாக் (Black), பர்பிள் (Purple) மற்றும் சீ கிரீன் ( Sea Green) நிறங்களில் விவோ எஸ்18 மற்றும் விவோ எஸ்18 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ எஸ்18 ப்ரோ ஸ்மார்ட்போன்.

தெறிக்கவிடும் 3 புதிய விவோ போன்கள்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அதேபோல் 50எம்பி செல்பி கேமரா வசதியுடன் இந்த விவோ எஸ்18 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனால் இதுவரை விவோ எஸ்18 கேமரா விவரங்கள் வெளியாகவில்லை. குறப்பாக 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த புத்தம் புதிய விவோ எஸ்18 மற்றும் விவோ எஸ்18 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்.

குறிப்பாக 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் விவோ எஸ்18 மற்றும் விவோ எஸ்18 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன்களை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் விவோ TWS 3இ இயர்பட்ஸ் ஆனது சிறந்த ஆடியோ அம்சங்களுடன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ எஸ்18இ, விவோ எஸ்18, விவோ எஸ்18 ப்ரோ போன்கள் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த போன்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo S18e, Vivo S18, Vivo S18 Pro phones to launch on December 14: check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X