Home
Mobile

மார்கெட் அதிருது.. வெறும் ரூ.27,305 பட்ஜெட்ல 3D கர்வ்ட் டிஸ்பிளே.. OV கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த போன்?

கேமரா பிரியர்களை மிரளவிடும் விதமாக சோனி சென்சாருடன் டெலிபோட்டோ, ஓம்னிவிஷன் சென்சாருடன் அல்ட்ரா வைடு ஆங்கிள் போன்ற அம்சங்களுடன் விவோ எஸ்18 (Vivo S18) மற்றும் விவோ எஸ்18 ப்ரோ (Vivo S18 Pro) போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விவரம் இதோ.

விவோ எஸ்18, எஸ்18 ப்ரோ அம்சங்கள் (Vivo S18, S18 Pro Specifications): இந்த போன்களில் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) 3D கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட், டிசிஐ-பி3 கலர் காமட் மற்றும் 2800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ரூ.27,305 பட்ஜெட்ல 3D கர்வ்ட் டிஸ்பிளே.. OV கேமரா.. 80W சார்ஜிங்!

இந்த 2 போன்களிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 4 (OriginOS 4) வருகிறது. ஆனால், விவோ எஸ்18 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் மொபைல் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

மறுபக்கம் விவோ எஸ்18 ப்ரோ மாடலில் ஆக்டா கோர் டைமன்சிட்டி 9200 பிளஸ் 4என்எம் (Octa Core Dimensity 9200+ 4nm) சிப்செட் மற்றும் இம்மார்டலிஸ்-ஜி715 ஜிபியு (Immortalis-G715 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதேபோல எஸ்18 போனில் ஓம்னிவிஷன் ஓவி50இ (OmniVision OV50E) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதோடு ஓம்னிவிஷன் ஓவி08டி10 (OmniVision OV08D10) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே எஸ்18 ப்ரோ மாடலில் 50 எம்பி மெயின் கேமரா சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) சென்சாருடன் வருகிறது. அத்துடன் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

ரூ.27,305 பட்ஜெட்ல 3D கர்வ்ட் டிஸ்பிளே.. OV கேமரா.. 80W சார்ஜிங்!

அதுமட்டுமல்லாமல், சோனி ஐஎம்எக்ஸ்633 (Sony IMX663) சென்சாருடன் 12 எம்பி டெலிபோட்டோ கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த 2 மாடல்களிலும் 50 எம்பி ஆட்டோபோகஸ் செல்பீ கேமரா வருகிறது. விவோ எஸ்18 போனில்
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் +256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் இருக்கிறது.

அதோடு 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்டும் கிடைக்க இருக்கிறது. அதேபோல விவோ எஸ்18 ப்ரோ போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

இந்த 2 போன்களிலும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஷ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ எஸ்18 போனின் 8ஜிபி + 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.27,305ஆகவும், 12 ஜிபி + 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.30,370ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.32,705ஆகவும், 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.35,630ஆகவும் இருக்கிறது.

ரூ.27,305 பட்ஜெட்ல 3D கர்வ்ட் டிஸ்பிளே.. OV கேமரா.. 80W சார்ஜிங்!

விவோ எஸ்18 ப்ரோ போனின் 12ஜிபி+256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.38,005ஆகவும், 16ஜிபி+256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.41,570ஆகவும், 16ஜிபி+512ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.43,950ஆகவும் இருக்கிறது. இந்த போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் விவோ எஸ்18 மாடலானது, டிசம்பர் 22ஆம் தேதியிலும், ப்ரோ மாடலானது, ஜனவரி 13ஆம் தேதியும் விற்பனைக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo S18 With 16GB RAM, Snapdragon 7 Gen 3 Chip Sale From December 22 in China Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X