வந்துட்டான் யா VIVO.. விற்பனையில் சக்கைபோடு போடும் பிரபலமான சீரீஸில் 2 புதிய போன்கள்! என்ன மாடல்?
2023 டிசம்பர் மாதத்தில் சில பெரிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் செய்யப்பட உள்ளன. டிசம்பர் 5 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் 12 (OnePlus 12) அறிமுகமாக உள்ளது, டிசம்பர் 12 ஆம் தேதியன்று ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) அறிமுகமாக உள்ளது.
இதற்கிடையில், இவ்விரு ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்கு முன்னதாகவே.. மற்றும் இவ்விரு மாடல்களுக்கும் போட்டியாக.. விவோ நிறுவனம் 2 புதிய போன்களை அறிமுகம் செய்ய உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அதுவும் உலகளவில் விற்பனையில் சக்கைபோடு போடும் ஒரு பிரபலமான சீரிஸின்கீழ் அறிமுகம் செய்ய உள்ளது.

அதென்ன மாடல்கள்? இவைகள் சரியாக எந்த தேதியில் அறிமுகமாகும்? இவ்விரு ஸ்மார்ட்போன்களை என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இது எந்த அடிப்படையில் ஒன்பிளஸ் 12 மற்றும் ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன்களுடன் போட்டி போடும்? இதோ விவரங்கள்:
அதென்ன மாடல்கள்? நாம் இங்கே பேசுவது விவோ எஸ்18 சீரிஸ் (Vivo S18 Series) ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். இந்த சீரிஸின் கீழ் விவோ எஸ்18 (Vivo S18) மற்றும் விவோ எஸ்18 ப்ரோ (Vivo S18 Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகமாகும்.

உடனே விவோ எஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் அறிமுகம் ஆகாதே என்று குழப்பம் அடைய வேண்டாம். உண்மைதான் விவோ எஸ் சீரீஸ் அதே பெயரில் இந்திய சந்தைக்கு வராது தான். ஆனால் வேறு சீரிஸின் கீழ் இந்தியாவில் நிச்சயம் அறிமுகமாகும்.
நினைவூட்டும் வண்ணம், கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ எஸ்17 சீரிஸ் மாடல்களானது இந்தியாவில் விவோ வி29 சீரீஸ் ஆக அறிமுகமானது. ஆக விவோ எஸ்18 சீரீஸ் ஆனது விவோ வி30 சீரிஸ் ஆக அல்லது வேறு பெயரில் இங்கேயும் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

விவோ எஸ்18 சீரிஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? விவோவின் அதிகாரப்பூர்வ டீஸரில், விவோ எஸ்18 சீரீஸ் ஆனது விவோவின் ப்ளூ ஹார்ட் ஏஐ அசிஸ்டென்ட் உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடிவமைப்பை பொறுத்தவரை, விவோ எஸ்18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது மிகவும் வித்தியாசமான பின்புற வடிவமைப்பை பெற்றுள்ளன. பேக் பேனலில் இடது மேல் மூலையில் (மிகவும் வழக்கமான) சதுர வடிவிலான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. ஆனால் அதற்கு கீழ் கேமரா செட்டப் அளவிலான ஆரா லைட் ஒன்றையும் காண முடிகிறது.
இதுதவிர்த்து விவோ எஸ்17 மற்றும் விவோ வி29 சீரீஸில் நாம் ஏற்கனவே பார்த்த ஓஐஎஸ் போர்ட்ரெயிட் (OIS Portrait) கேமராவானது இதிலும் இடம்பெறலாம். அதாவது மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுக்கான ஆதரவு (Optical Image Stabilization Support) இருக்கும் என்று அர்த்தம்.
எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, விவோ எஸ்18 மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட்டை (Snapdragon 7 Gen 3 Chipset) பேக் செய்யலாம். அதே சமயம் ப்ரோ வேரியண்ட் ஆன விவோ எஸ்18 ப்ரோ மாடலானது டைமன்சிட்டி 9200 பிளஸ் சிப்செட் (Dimensity 9200+ SoC) உடன் அனுப்பப்படலாம்.
விவோ எஸ்18 சீரீஸ் ஆனது எந்த அடிப்படையில் ஒன்பிளஸ் 12, ஐக்யூ 12-க்கு போட்டியாக இருக்கும்? இந்த மூன்றும் இடையிலான போட்டி கேமராவில் மட்டுமே இருக்கும். ஒரு நல்ல கேமரா ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள் ஒன்பிளஸ் 12, ஐக்யூ 12 5ஜி-யின் விலை நிர்ணயத்தால் திசை திருப்பப்பட்டால், விவோ எஸ்18 சீரீஸ் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
விவோ எஸ்18 சீரீஸ் என்ன விலைக்கு வரும்? விவோ எஸ்17 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.29,000 க்கும், விவோ எஸ்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.36,000 க்கும் அறிமுகமானது.
இதுவே இந்தியாவிற்கு விவோ வி29 சீரிஸ் ஆக வந்து, தற்போது விவோ வி29 மாடலானது ரூ.32,999 க்கும், விவோ வி29 ப்ரோ மாடலானது ரூ.39,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இதேபோன்ற அல்லது இதைவிட சற்றே அதிகமான விலைக்கு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








