Home
Mobile

சொல்லாம கொள்ளாம புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய Vivo.! என்ன விலை?

சியோமி, ஒப்போ, சாம்சங் நிறுவனங்களுக்குப் போட்டியாக அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது விவோ நிறுவனம். குறிப்பாக தனித்துவமான கேமரா வசதி, தரமான மென்பொருள், பெரிய டிஸ்பிளே எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் விவோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் விவோ நிறுவனம் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது விவோ எஸ்17இ (vivo S17e) எனும் ஸ்மார்ட்போனை தான் தற்போது விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இந்த புதிய போன் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சொல்லாம கொள்ளாம புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய Vivo.!

6.78-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த விவோ எஸ்17இ ஸ்மார்ட்போன். மேலும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 2400 × 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புத்தம் புதிய விவோ எஸ்17இ ஸ்மார்ட்போனில் 2.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் பிராசஸர் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Mali-ஜி60 எம்சி ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன். இதுதவிர OriginOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ எஸ்17இ ஸ்மார்ட்போன் மாடல். எனவே குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் கூட இந்த போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய விவோ எஸ்17இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

அதேபோல் 4600 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த விவோ எஸ்17இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு 66 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சொல்லாம கொள்ளாம புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய Vivo.!

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ எஸ்17இ ஸ்மார்ட்போன். மேலும் கருப்பு, நீலம் மற்றும் தங்க நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் ஆரம்ப விலை 2099 yuan (இந்திய மதிப்பில் ரூ.24,785).

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo S17E phone was launched with great software and stunning design : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X