வேற எந்த Vivo போனும் வாங்கிடாதீங்க.. இந்த மாடலுக்கு வெயிட் பண்ணுங்க.. வொர்த்-ஆ இருக்கு!
வாங்கினால் விவோ (Vivo) நிறுவனத்தின் ஸ்மார்ட்போனை தான் வாங்குவேன் என்று அடம்பிடிக்கும் அளவிற்கு, விவோ ரசிகர்கள் யாரேனும் இருந்தால்.. "அவசரப்பட்டு வேற எந்த விவோ மாடலையும் வாங்கி விட வேண்டாம்.. இன்னும் சிறிது நாட்கள் பொறுமையாக இருங்கள்" என்று அவர்களிடம் கூறுங்கள்.
ஏனென்றால் விவோ நிறுவனத்தின் எஸ்17 ப்ரோ (Vivo S17 Pro) மாடல் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது விவோ எஸ்17 சீரிஸின் கீழ் வெளியாகும் ஹை-எண்ட் மாடலாக இருக்கும், இந்த சீரீஸின் கீழ் மேலும் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும். அவைகள் விவோ எஸ்17 (Vivo S17) மற்றும் விவோ எஸ்17இ (Vivo S17e).

விவோ எஸ்17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் மற்றும் அம்சங்கள் பற்றி விவோ நிறுவனம் எந்தவிதமான விவரங்களையும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட, விவோ எஸ்17 ப்ரோ ஆனது வருகிற 2023 ஜூன் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ஒரு லீக்ஸ், விவோ எஸ்17 ப்ரோ மாடலானது ஒரு நல்ல கேமரா போனாக (Camera Phone) இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. அந்த லீக்ஸ் தகவலின்படி, விவோ எஸ்17 ப்ரோவில் ட்ரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera) செட்டப் இடம்பெறும்.
அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image stabilisation - OIS) உடனான 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்766வி மெயின் கேமரா + அல்ட்ரா-வைட் லென்ஸுடன் கூடிய 8 மெகாபிக்சல் கேமரா + 12 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்663 கேமரா பேக் செய்யப்படலாம்.
மற்ற அம்சங்களை பொறுத்தவரை, விவோ எஸ்17 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8200 சிப்செட் (Octa-core MediaTek Dimensity 8200 SoC) மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை (Wired Fast Charging) ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
விவோ தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை விவோவின் துணை நிறுவனமான ஐக்யூ (iQOO) வருகிற மே 23 ஆம் தேதியன்று, 2 புதிய ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அவைகள் ஐக்யூ நியோ 8 ( iQOO Neo 8) and ஐக்யூ நியோ 8 ப்ரோ (iQOO Neo 8 Pro) மாடல்கள் ஆகும்.
சீன அறிமுகத்திற்கு பின்னர் ஐக்யூ 8 நியோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்று கேட்டால்.. கண்டிப்பாக அறிமுகமாகும்; ஆனால் கொஞ்சம் தாமதமாக அறிமுகமாகும். நினைவூட்டும் வண்ணம் நியோ 7 சீரிஸ் சீனாவில் அறிமுகமான பின்னர், இந்தியாவிற்கு வர சுமார் நான்கு மாதங்கள் ஆனது.
ஆக எப்படி பார்த்தாலும் நியோ 8 சீரிஸ் ஆனது 2023 இன் இரண்டாம் பாதியில் தான் இந்தியாவில் அறிமுகமாகும். நினைவூட்டும் வண்ணம் நியோ 7 ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.29,999 க்கு அறிமுகமானது. ஆனால் தற்போது இது அமேசானில் ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இந்த மிட்ரேன்ஜ் போன் தற்போது தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








