Vivo இப்படி ஒரு போனை ரிலீஸ் செய்யும்னு யாருமே நினைக்கல.! Vivo S16e பட்ஜெட்டில் கிங்-ஆ.!

|

விவோ நிறுவனம் (Vivo) இன்று சீன ஸ்மார்ட்போன் சந்தையில் அதன் புதிய வரவான விவோ எஸ் 16 (Vivo S16), விவோ எஸ் 16 ப்ரோ (Vivo S16 Pro) மற்றும் விவோ எஸ் 16இ (Vivo S16e) ஆகிய மூன்று மாடல் ஸ்மார்ட்போன்களை (smartphones) அறிமுகம் செய்துள்ளது.

இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் ஒன்றுடன் ஒன்று மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Vivo S16e போனின் விபரங்களை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

Vivo இப்படி ஒரு போனை ரிலீஸ் செய்யும்னு யாருமே நினைக்கல.!

விவோ நிறுவனம் அறிவித்த அறிவிப்புகளைப் போல, சீனாவில் இந்த 3 புதிய ஸ்மார்ட்போன் டிவைஸ்களை நிறுவனம் இப்போது அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளது. இந்த 3 போன்களும் செல்ஃபி ஸ்னாப்பருக்கான சென்டர்-பொசிஷன் செய்யப்பட்ட பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் வருகிறது. பாதுகாப்பிற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், பின்புறத்தில் ஒரு செவ்வக மாட்யூலில் மூன்று கேமராக்களை இந்த 3 போன்களும் கொண்டுள்ளன.

Vivo S16e ஆனது 6.62' இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை 120Hz ரெப்ரெஷ் ரேட் உடன் கொண்டுள்ளது. இது 20:9 விகிதம், HDR10+ மற்றும் 2400 × 1080 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாலி-ஜி78 எம்பி10 ஜிபியு உடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி யுஎஃப்எஸ் 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது எக்ஸினோஸ் 1080 5nm சிப்செட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய Vivo S16e ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OriginOS தனிப்பயன் ஸ்கின் உடன் வருகிறது. கேமரா பிரிவில், Vivo S16e ஆனது பின்பக்கத்தில் ஆர லைட் என்ற LED ஃபிளாஷ் கொண்ட 50MP பிரைமரி கேமரா, 2MP போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. முன்பக்கத்தில் இந்த சாதனம் செல்ஃபி மற்றும் வீடியோ காலிங்கிற்காக 16MP ஸ்னாப்பரை கொண்டுள்ளது.

இது 66W சார்ஜிங்குடன் 4,600mAh பேட்டரியை பேக் செய்கிறது. இணைப்பு அம்சங்களில் 5G SA/ NSA, டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11, ப்ளூடூத் 5.2, GPS+ GLONASS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றை அடக்கியுள்ளது. பாதுகாப்பிற்காக இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரை கொண்டுள்ளது. இந்த போன்களில் 3.5mm ஆடியோ ஜாக் இல்லாததால் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ வுடன் வருகின்றது.

Vivo S16e விலை பற்றி பேசுகையில், இதன் 8GB + 128GB மாடலுக்கு RMB 2099 விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ. 24,900 ஆகும். இதன் 8GB + 256GB மாடலுக்கு இந்திய மதிப்பு சுமார் ரூ. 27,300 ஆகும். அதேபோல், இதன் 12GB + 256GB மாடலின் விலை ரூ. 29,700 ஐ நெருங்கும் என்று கூறப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட்போன் மாடலாக இந்த Vivo S16e இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இது தவிர, Vivo S16 ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசுகையில், இதன் ஆரம்ப மாடலான 8GB+128GB மாடலின் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 29,700 ஐ நெருங்குகிறது. இதன் மற்ற வேரியண்ட் மாடல்கள் ரூ. 32,000 முதல் ரூ. 39,200 விலைக்குள் கிடைக்கிறது. மறுபுறம், Vivo S16 Pro போனின் விலை பற்றி பார்க்கையில், இதன் 12GB + 256GB மாடல் ரூ. 39,200 என்ற விலையிலும்; இதன் 12GB + 512GB மாடலின் விலை ரூ. 42,700 என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo S16e Launched With Triple Camera Setup Under Budget Price In China

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X