அவசர அவசரமாக மூன்று 5G ஸ்மார்ட்போன்களை ஒரே நேரத்தில் அறிமுகம் செய்த Vivo.!

|

உலகமே கொரோனாவில் இருந்து மெல்ல மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. இந்தச் சூழலில் தான் கொரோனா பரவல் மீண்டும் சீனாவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவசர அவசரமாக விவோ நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது விவோ எஸ்16, விவோ எஸ்16 ப்ரோ, விவோ எஸ்16இ என்ற மூன்று ஸ்மார்ட்போன்களை தான் அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.

சீனாவில் மட்டுமே அறிமுகம்

அதேபோல் இந்த மூன்று போன்களும் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான சிப்செட் மற்றும் தரமான கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த மூன்று ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பெஸ்ட்னு சொல்வது எல்லாம் பெஸ்ட் இல்ல! 2022 இன் சிறந்த பேட்டரி கொண்ட Smartphone இதுதான்.!பெஸ்ட்னு சொல்வது எல்லாம் பெஸ்ட் இல்ல! 2022 இன் சிறந்த பேட்டரி கொண்ட Smartphone இதுதான்.!

 சூப்பர் டிஸ்பிளே

சூப்பர் டிஸ்பிளே

விவோ எஸ்16 மற்றும் விவோ எஸ்16 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 6.78-இன்ச் curved AMOLED டிஸ்பிளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளன. பின்பு விவோ எஸ்16இ ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் டிஸ்பிளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது.

எதிர்பார்த்த விலை இல்ல., அதைவிட ரொம்ப கம்மி: எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் OnePlus 11 5G!எதிர்பார்த்த விலை இல்ல., அதைவிட ரொம்ப கம்மி: எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் OnePlus 11 5G!

அருமையான கேமரா

அருமையான கேமரா

விவோ எஸ்16 மற்றும் விவோ எஸ்16 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 50எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளன. ஆனால் விவோ எஸ்16 ஸ்மார்ட்போன் ஆனது 16எம்பி செல்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது.

மேலும் விவோ எஸ்16 ஸ்மார்ட்போனின் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

விவோ எஸ்16 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ எஸ்16இ ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் லென்ஸ்+ 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதுதவிர இந்த மூன்று விவோ போன்களும் தரமான எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளன.

பலருக்கும் தெரியாத கம்பெனி ரகசியம்.. அடிச்சு கேட்டா கூட iPhone ஓனர்கள் இதை வெளியே சொல்ல மாட்டாங்க!பலருக்கும் தெரியாத கம்பெனி ரகசியம்.. அடிச்சு கேட்டா கூட iPhone ஓனர்கள் இதை வெளியே சொல்ல மாட்டாங்க!

தரமான சிப்செட்

தரமான சிப்செட்

விவோ எஸ்16 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு விவோ எஸ்16 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது Dimensity 8200 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் விவோ எஸ்16இ ஸ்மார்ட்போனில் Exynos 1080 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்ட சிப்செட் மிகவும் தரம் வாய்ந்தது என்றுதான் கூறவேண்டும்.

முழு நட்சத்திரத்தை விழுங்கிய ராட்சச பிளாக்ஹோல்.! ஸ்டாரை தடயமே இல்லாமல் அழித்த வீடியோ.!முழு நட்சத்திரத்தை விழுங்கிய ராட்சச பிளாக்ஹோல்.! ஸ்டாரை தடயமே இல்லாமல் அழித்த வீடியோ.!

நீங்கள் எதிர்பார்த்த பேட்டரி வசதி

நீங்கள் எதிர்பார்த்த பேட்டரி வசதி

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய மூன்று விவோ போன்களும் 4600 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளன. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் இந்த மூன்று போன்களும் 66 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கனெக்டிவிட்டி

5ஜி ஆதரவு, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் வி5.1, வைஃபை 6, டூயல் சிம் ஆதரவு, பேஸ் அன்லாக் உள்ளிட்ட பல
கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த மூன்று விவோ ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போன்கள் இன்-டிஸ்பிளே கைரேகை
ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளன.

Jio பயனர்களே.. சிந்தாம சிதறாம 90 நாட்களை அள்ளுங்க! 180 ஜிபி டேட்டா உடன் மலிவு விலை பிளான்!Jio பயனர்களே.. சிந்தாம சிதறாம 90 நாட்களை அள்ளுங்க! 180 ஜிபி டேட்டா உடன் மலிவு விலை பிளான்!

மூன்று விவோ ஸ்மார்ட்போன்களின் விலை

மூன்று விவோ ஸ்மார்ட்போன்களின் விலை

  • விவோ எஸ்16 ஸ்மார்ட்போனின் விலை CNY 2,499 (இந்திய மதிப்பில் ரூ.29,600)
  • விவோ எஸ்16 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 3,299 (இந்திய மதிப்பில் ரூ.39,600)
  • விவோ எஸ்16இ ஸ்மார்ட்போனின் விலை CNY 2,099 (இந்திய மதிப்பில் ரூ.24,900)
  • Starry Night Black, Hyacinth Purple, Sea Foam Green shades போன்ற நிறங்களில் இந்த விவோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனங்கள் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்.

    மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Vivo S16 series launched with 4,600mAh battery, triple cameras: Specs, Features and More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X