பந்துக்கு பந்து பறக்கும் சிக்ஸ் அடிக்கும் Vivo: அவசரப்பட்டு பணத்தை செலவு பண்ணாதீங்க!

|

ஸ்மார்ட்போன் சந்தையில் வெவ்வேறு அம்சங்களோடு ஸ்மார்ட்போன்கள் தொடர்ச்சியாக அறிமுகமான வண்ணம் இருக்கிறது. பட்ஜெட் விலை முதல் ப்ரீமியம் விலைப் பிரிவு வரை பல்வேறு ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டிருக்கிறது. அதன்படி விவோ நிறுவனம் விரைவில் ஒரு ஸ்மார்டபோனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

பந்துக்கு பந்து பறக்கும் சிக்ஸ் அடிக்கும் Vivo: நீங்க ரெடியா இருங்க!

விவோ நிறுவனம் பல்வேறு விலைப்பிரிவில் புதுப்புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. விவோவிற்கான வாடிக்கையாளர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் விவோ நிறுவனம் விரைவில் விவோ எஸ்16 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

Vivo S16 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் கீக்பெஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி சிப்செட் மற்றும் 12 ஜிபி ரேம் ஆதரவோடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vivo S16 ஸ்மார்ட்போனானது கீக்பெஞ்ச் தளத்தில் V2244A மாடல் எண்ணுடன் காணப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி மற்றும் அட்ரீனோ 650 ஜிபியூ உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கீக்பெஞ்ச் மல்டிகோர் சோதனையில் 3,138 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

விவோ எஸ்16 குறித்த தகவல் கடந்த சில வாரங்களாக இணையதளத்தில் உலா வந்துக் கொண்டிருக்கிறது. Vivo S16 வெளியீடு விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 91 மொபைல்ஸ் இந்த ஸ்மார்ட்போனை கீக்பெஞ்சில் கண்டறிந்திருக்கிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனின் சில விவரக்குறிப்புகள் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 மூலம் இயக்கப்படும் என இதன்மூலம் கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விவோ எஸ்16 ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்பது ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கும் என்பதும் கணிக்கமுடிகிறது.

விவோ எஸ்16 ஸ்மார்ட்போன் குறித்த கூடுதல் தகவல் எதுவும் இல்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக இணையதளத்தில் உலா வந்துக் கொண்டிருக்கிறது. முழு எச்டி+ டிஸ்ப்ளே, வேகமாக சார்ஜ் செய்யும் திறன், பெரிய பேட்டரி, குறைந்தபட்சம் டூயல் ரியர் கேமரா அமைப்புகளைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Vivo S16 சீரிஸ் இந்த மாதம் சீனாவில் அறிமுகமாகும் எனவும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிற நாட்டு சந்தைகளில் அறிமுகமாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் விவோ நிறுவனம் Vivo X90 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டவர்களை கண்டிப்பாக காத்திருக்க வைக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பந்துக்கு பந்து பறக்கும் சிக்ஸ் அடிக்கும் Vivo: நீங்க ரெடியா இருங்க!

விவோவின் Vivo X90 சீரிஸ் ஸ்மார்ட்போனானது Bureau of Indian Standards (BIS) இணையதளத்தில் காணப்பட்டிருக்கிறது. பிஐஎஸ் இணையதளத்தில் வி2218 என்ற மாடல் எண்ணுடன் இது காணப்பட்டிருக்கிறது. மேலும் இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. விவோ எக்ஸ்90 ஸ்மார்ட்போனானது 6.78 இன்ச் அமோலெட் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.

விவோ எக்ஸ்80 சீரிஸ் இன் வாரிசாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்னவாக இருக்கும் என்பதை ஓரளவு கணித்துவிடலாம். காரணம், இந்த ஸ்மார்ட்போன் முன்னதாகவே சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகி இருக்கிறது. இந்த புதிய விவோ சீரிஸ் ஸ்மார்ட்போனானது Bureau of Indian Standards (BIS) இணையதளத்தில் காணப்பட்டது. இதன்மூலம் இந்த போன் விரைவில் அறிமுகமாகும் என்பதை உறுதி செய்ய முடிகிறது.

Best Mobiles in India

English summary
Vivo S16 Might Launching Soon with these Specification: Should You Wait

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X